உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முக்கிய ஸ்திரமான ஐட்டத்தில் சேர்ந்தவர்கள் ஆதலாலும் தாங்கள் நமது சேது சமஸ்தான வித்வானாக இருத்தலைத் தவிர வேறு எந்த சமஸ்தானத்திலும் கல்விச் சாலையிலும் தங்கள் ஆயுள் கால பரியந்தம் சர்வீஸுக்குப் போகப்படாதென்று நம்முடைய உத்தரவுக்குத் தாங்கள் கட்டுப்பட்டு ஒப்புக் கொண்டிருப்பதனாலும் ஷெ ப்ரொஸீடிங்ஸை அனுசரித்து மேல்கண்ட மாசமொன்றுக்கு ரூ50 ஆக உள்ள கிராண்டினை பசலி ஒன்றுக்கு ரூ600 ஆக வைத்து நம் முன்னோர் முறைமையை அனுசரித்து நம்மால் தங்கள் வித்தியா கௌரவத்தைப் பாராட்டித் தங்களுக்குச் சம்மானிக்கப்பட்ட பல்லக்கின் செலவுக்காக ஷ தர்ம மகமை ஐவேஜியினின்றும் தங்களுக்குக் கொடுத்துவர ஏற்பட்டபடி வருஷம் 1க்கு ரூ35ம் சேர்த்து ஆக பசலி ஒன்றுக்கு ரூ635 அறுநூற்று முப்பந்தைந்து வீதம் u 1317ம் பசலி முதல் தங்கள் ஆயுள் காலம் வரை தங்களுக்குச் செல்லாக்கி

வரவேண்டுமென்று ஆவணம் கூறுகின்றது. பொருள் நெருக்கடி மிகுதியாயிருந்த நிலையிலும், மனம்போல் செலவழிக்க உரிமையற்ற காலத்திலும் சேதுபதி மன்னர் தமிழ் காக்கத் தவறிற்றிலர். இந்தப் பத்திரம் மதுரை ஆவணப் பதிவு அலுவலகத்தில் 09-11-1901 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை ஒட்டி முத்துப் பல்லக்கில் இராகவையங்காரை அமர்த்திப் பாஸ்கர சேதுபதி அப்பல்லக்கைத் தாமே சுமந்த பெருமைக்குரிய நிகழ்வும் நடந்தது. இதனால்தான் மன்னர் தம் இளவயதில் இறந்தபோது இராகவையங்கார்.

பாட்டும் உரையும் பயிலாப் பதடிகள்தம் ஓட்டைச் செவியுள் உகுப்பேனோ

-

நீட்டுகொடை

செங்கையால பாற்கரனே செந்தமிழ்ப்பாவின் சுவையை

எங்கையா சொல்வேன் இனி

என மனம் வருந்திப் பாடினர். சேதுபதியின் ஆவணங்கள் பலப்பல பாட்டாய் உரையாய் அமைந்துள்ளன. அவற்றையெல்லாம் ஆராய்வது அறிஞர்தம் கடனாகும்.

காகிதச்சுவடி ஆய்வுகள்

437