உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




க.சிவகாமி .

நூலகர்

பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில் நுட்பக் கல்லூரி வல்லம் 613 403

நூலகப் பகுப்பும் ஆவணப் பகுப்பும்

முன்னுரை

மானுட சமுதாயத்தின் அறிவுப் பசியைத் தணிக்க இரு வழிகள் உள. ஒன்று நூல்; மற்றது ஆசிரியர் கற்றலும் கேட்டலுமாகிய இவ்விரண்டினுள் கற்க உதவுபவை நூலகங்கள். நூலகங்களில் சேர்த்துப் பாதுகாக்கப்பட்டு வரும் அரிய கருவூலங்கள் பலவகைப்படும். அச்சு நூல்கள், சுவடிகள், ஓவியங்கள், வரைபடங்கள், ஒலி நாடாக்கள். நுண்படச் சுருள்கள். நுண்பட அட்டைகள், ஒளி வில்லைகள், கம்ப்யூட்டர் ஃபிளாப்பி மற்றும் சி டி ஆகியவை தற்காலத்தில் காணப்படும் நூலகப் பொருட்களாகும். அச்சு நூல்களை விடவும் பிறவகைச் சாதனங்களின் மூலம் அறிவு பெறுவது இருபத்தொன்றாம் நூற்றாண்டில் மிகவும் எளிமையாகி விடும். ஆனால், நமது முன்னோர்களின் வரலாறு. சமுதாய அமைப்பு. நாகரிகம், பண்பாடு. கலை முதலியவற்றை அறிய அடிப்படைச் சான்றுகளாக இருப்பவை ஆவணங்களே. இவ்வாவணங்கள் அவை எழுதி வைக்கப்பட்ட பொருளாலும், எழுத்து வடிவத்தாலும் மொழியாலும் பல வகைப்படுவன.

நூல்களும் ஆவணங்களும்

தற்காலத்தில் 'நூல்' என்பது ஏதேனும் ஒரு பொருள் பற்றி எழுதி அச்சிடப்பட்டுக் கட்டுச் செய்யப்பட்ட தொகுப்பாக விளங்குவது எனக் கொள்ளலாம். பல்வேறு தலைப்புக்களில் நூல்கள் சேகரித்து வைக்கப்பட்டுப் பலரும் பயன்பெறச் செய்வதே நூலகமாகும்.

"ஒரு பெரிய நூலகத்தில் ஒரு நூல் எந்த இடத்திலுள்ளது என்பதைச் சரியாக அறிந்து எடுக்கவும். அவ்வாறு எடுத்துப் பயன்படுத்திய நூலை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும். புதிய நூல்களை அவற்றின் நுவல் பொருளுக் கேற்றவாறு வைக்கப்பட வேண்டிய இடத்தை முடிவு செய்வதற்கும் நூலகப் பகுப்பு (Library Classification) மிக அவசியமாகும்.

ஆனால், ஆவணங்களைப் பொறுத்தவரை, கிடைத்தவற்றை அப்படியே

4

1

S.R Ranganathan, Elements of Library Classification, p. 6.

438

காகிதச்சுவடி ஆய்வுகள்