உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




குத்து வைத்துப் பயன்படுத்த முடியும். அவை நுவலும் பொருள் ஒன்றாகவோ, பலவாகவோ இருக்கலாம். அவற்றை நம் விருப்பப்படி அமைக்க இயலாது. அவ்வாறு ஆவணங்கள் தொகுத்துப் பகுத்து வைக்கப்பட்ட இடம் ‘ஆவணக் காப்பகம்' எனப் பெயர் பெறும். ஆவணக் காப்பகத்தில் ஆவணங்களைப் பகுத்து வைத்துள்ள முறையைப் பற்றி (Archives Classification) ஆராய்வதோடு அதனை நூலகப் பகுப்போடு ஒப்பிட்டுப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நூலகப் பகுப்பில் ஆவணங்களின் இடம்

நூலகவியல் துறையில் பண்டைக்காலம் தொட்டே நூல்களைப் பகுப்பதில் பல்வேறு முறைகளைப் பின்பற்றியுள்ளனர். ஓவ்வொரு முறையினையும் புதிதாக உருவாக்கும் போது, பழைய முறையினைப் பின்பற்றி - சிற்சில மாற்றங்கள் செய்து புதிய முறையினை நடைமுறைப் படுத்தியுள்ளனர். எனினும், தற்போது பயன்பாட்டிலுள்ள சில பகுப்பு முறைகளையும். அவற்றில் ஆவணங்களின் இடத்தினையும் காணலாம்.

1. தெவி டெசிமல் பகுப்பு (Dewey Decimal Classification)

இம்முறை கி.பி. 1876ஆம் ஆண்டு முதன்முதலில் மெல்பில் தெவி என்பவரால் வெளியிடப்பட்டது. இந்த நூலின் பெயர் "A Classification and Subject Index for cataloguing and arranging the books and pamphlets of a library" என்பதாகும். இதனுடைய திருத்தப்பட்ட பதிப்புகள் பல வெளிவந்தன. இதன் அடிப்படையாவது. உலகத்திலுள்ள பொருள்கள் அனைத்தையும் பத்துப் பிரிவுகளில் அடக்குகிறார். ஓவ்வொரு பிரிவிற்கும் நூறு உட்பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுவானவை

000

தத்துவமும் அது சார்ந்தவையும்

சமயம்

100

200

300

சமூக அறிவியல்

400

மொழி

500

தனி அறிவியல்

600

700

800

900

தொழில் நுட்பம்

கலை -

இலக்கியம்

வரலாறு, புவியியல் மற்றும் தொடர்பானவை.

இவற்றுள் 'பொதுவானவை' என்ற தலைப்பின் கீழ் சுவடிகள், ஆவணங்கள் பகுக்கப்பட்டுள்ளன.

025. 171

1712

1714

சுவடிகள். ஆவணங்கள் சார்ந்தவை மற்றும் அரியன சுவடிகள்

ஆவணம் சார்ந்தவை

காகிதச்சுவடி ஆய்வுகள்

439