உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




'சி' பிரிவுக் கோப்புகள் ஐந்தாண்டுகளுக்குப் பாதுகாக்கப்படும். சில மாநிலங்களில் இப்பிரிவுக் கோப்புகள் பத்தாண்டுகளுக்குப் பாதுகாக்கப்படுகின்றன.

அன்றாட நிருவாகக் கோப்புகள் இவற்றில் இடம்பெறுகின்றன.

'டி' பிரிவில் ஆண்டுதோறும் அழித்துவிடக்கூடிய தற்காலிகக் கோப்புகள் இடம்பெறுகின்றன

6. துறைவாரி ஆவணங்கள்

நிருவாகத் துறைகளின் ஆவணங்கள் துறைவாரியாகப் பகுத்து ஆண்டு வரிசையில் அடுக்கி வைக்கப்படுகின்றன. இம்முறையே எடுத்து வைப்பதற்கு எளிமையானது.

7-8 அரிய நூல்களும் வரைபடங்களும் அச்சிடப்பட்டவைகளும். அச்சிடப்படாதவைகளும் வைக்கப்படலாம்.

நிறைவுரை

1. நூலகங்களுக்கும், ஆவணக் காப்பகங்களுக்கும் உள்ள தொடர்பை விளக்கி, அவற்றின் பாகுபாட்டு முறைகள் விளக்கப்பட்டுள்ளன.

2. நூலகப் பகுப்புமுறை நூல்களுக்காகக் கொடுக்கப்பட்டாலும் அவற்றிலும் ஆவணங்களுக்கென ஒரு பகுப்பு எண் கொடுக்கப்பட்டுள்ளது

3. ஆவணங்களைக் காலவரிசைப்படி, இடவரிசைப்படி பொருள் வரிசைப்படி, துறை வரிசைப்படி வைத்துப் பயன்படுத்துவதே ஆவணக் காப்பகப் பகுப்பாகும்

4. ஆவணக் காப்பகப் பகுப்பினை இன்னும் விரிவாகப் பகுக்க இயலும். அப்பகுப்பு அவ்வவ்வாவணக் காப்பகத்தின் சேகரிப்பைப் பொருத்து அமையும்.

BIBLIOGRAPHY

Cook, Michael

Desai, Sanjiv, P.

The Management of Information from Archives,

Gower Publishing Company Ltd., Hants GV 113HR 1931.

Abhilekh Vyavasthapanaci Marga Darshika,

Department of Archives,

Government of Maharashtra,

Mumbai.

1988.

444

காகிதச்சுவடி ஆய்வுகள்