உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. மராட்டியர் வரலாறு கூறும் மராட்டி - மோடி எழுத்து ஆவணங்கள்

2. மெக்கன்சியின் வரலாற்று ஆவணங்கள்

3. ஆங்கிலேயரின் வரலாற்றுக் குறிப்புகள் முதலியன.

2. வரலாற்றுத் தனிநபர் ஆவணங்கள்

வரலாற்றில் முக்கிய இடம்பெற்ற தலைவர்கள், சீர்திருத்தவாதிகள், சமயச் சான்றோர் ஆகியோர்களின் கைப்பட எழுதிய கடிதங்கள், ஆணைகள், பேச்சுக்கள் ஆகியன இப்பிரிவில் இடம்பெறுகின்றன.

1.காந்தியடிகளின் கடிதங்கள்

2. அண்ணாவின் உரைகள்

3. நேதாஜியின் பலவிதமான கட்டுரைகள்

முதலியன.

3.சமுதாய ஆவணங்கள்

சென்னைக் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் சமுதாய ஆவணங்களாக

மெக்கன்சியின் சேகரிப்பில் உள்ளன.

1.பாளையப்பட்டுக்களின் வமிசாவளி

2. பல்வேறு சமுதாய மக்களைப் பற்றிய ஆவணங்கள்

3. பயணக் குறிப்புக்கள்

இதிலடங்குவன.

4-5 நிருவாக - வருவாய் ஆவணங்கள்

இவ்விரண்டினையும் ஒரேபகுப்பினுள் அடக்கலாம். இ வை கோப்புகளாகக் கிடைக்கின்றன இக்கோப்புகளை ஏ. பி. சி. டி என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். இதனைத் தமிழ்நாட்டில் 'டாட்டன்ஹாம் பகுப்புமுறை' என்றும் மகாராட்டிரத்தில் 'ஆண்டர்ஸன் பகுப்புமுறை' என்றும் கூறுவர்.

'ஏ' பிரிவு ஆவணங்கள் அரசின் முக்கிய முடிவுகள். ஆணைகள், சட்ட முன்வடிவுகள், சட்டத் திருத்தங்கள், வரலாற்றுக் குறிப்புகள் முதலியன இதிலடங்கும். இவை நிரந்தரமாகப் பாதுகாக்கப்படும்.

'பி' பிரிவில் 30 ஆண்டுக் காலத்திற்குப் பாதுகாக்கப்படும் கோப்புகள் இடம்பெறும். ஆரசியல், சமுதாய, பொருளாதார ஆவணங்கள் இவற்றில் கொண்டு வரப்படுகின்றன.

காகிதச்சுவடி ஆய்வுகள்

443