உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ச.சம்பத்குமார் கல்லூரி நூலகம் திருப்பனந்தாள்

ஆவணக் காப்பகங்கள்

ஆவணக் காப்பகம்

அரசு மற்றும் தனியார் நிர்வாகத்தில் செய்கின்ற பணியினை உள்ளடக்கிய கோப்புகளைத் தங்களுடைய எதிர்காலப் பணியினைச் செய்யப் பயன்படக்கூடியதும் கடந்த கால முன்னுதாரணங்களை எதிர்காலச் சந்ததியினர் சான்றாக எடுத்துக் கொள்ளக் கூடியதும். அவற்றைப் போற்றிப் பாதுகாக்கின்ற இடமுமே ஆவணக் காப்பகம் ஆகும்.

மௌரியர்கள் ஆட்சியின்போதும் விசயநகரப் பேரரசர்கள் ஆட்சியின்போதும் ஆவணங்களைப் பாதுகாத்து வந்துள்ளதை வரலாற்று அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். ஆவணங்களைப் பாதுகாத்து வைக்கும் இடத்தை ‘ஆவணக்களரி' என்று சோழர் காலக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டி ஆர். ஹெல்லன் பர்க் என்ற வல்லுநர்.

நடைமுஉருவாக்கப்பட்டதும் ஒரு நிறுவனத்தின்

நடைமுறையை, பத்திரங்கள் மற்றும் நடவடிக்கைகளை எதிர்காலச் சந்ததியினருக்காக ஒரு குறிப்பிட்ட இடத்தில்

பராமரிப்புச் செய்வதே ஆவணக்காப்பகம்"

என்று வரையரை செய்கிறார். மேலும் பொது ஆவணங்களையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களையும் பாதுகாக்கின்ற இடம் எனவும் விளக்குகிறார்.

ஆவணங்களின் அளவிற்கதிகமான எண்ணிக்கைக் குவிப்பு மற்றும் அதன் வேகமான வளர்ச்சி உலகெங்கும் ஒரு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஆவணங்களைக் கட்டுப்படுத்தவும் மற்றும் சிறந்த முறையில் பாதுகாக்கவும் அவற்றை வருங்காலச் சந்ததியினர் நன்கு பயன்படுத்தவும் ஆவணக் காப்பகங்கள் இன்றியமையாத ஒன்றாக விளங்குகின்றன.

சென்னை : தற்போது சென்னை எழும்பூரில் ஆவணக் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இத்தகைய அரிய ஆவணக் காப்பகத்தின் தேவையை இந்தியாவில் சென்னையில்தான் முதன் முதலில் உணர்ந்து ஆவணங்களைப் காகிதச்சுவடி ஆய்வுகள்

37