உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பராமரிக்க ஒரு காப்பகம் தொடங்கப்பட்டது. இக்காப்பகம் 1909இல் அமைக்கப் பட்டாலும் 1805இல் சென்னை ஆளுநர் லார்ட் வில்லியம் பெண்டிங் என்பார் புனித ஜார்ஜ்கோட்டையில் காப்பகம் அமைக்க வித்திட்டார். இது 1968இல், சென்னை மாநில ஆவணக் காப்பகம்' என்றும். 1969இல் 'தமிழ்நாடு ஆவணக் காப்பகம்' என்றும். 1973இல் 'தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் ஆராய்ச்சி' என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இக்காப்பகம் தென் கிழக்கு ஆசியாவின் மிகப் பெரியதும். பழமையானதும் ஆகும். இங்கு இலட்சக்கணக்கான கோப்புகளும், நூல்களும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் இது ஆவணக் காப்பக நூலகமாகவும் அமைந்துள்ளது.

இந்த ஆவணக் காப்பகத்தில் 300 ஆண்டுகளுக்கு உட்பட்ட ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு உரியவை தவிர அதற்கு முன்பு உள்ள தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத் துறைகளின் ஆவணங்களும் கடந்த 10 ஆண்டுகளுக்கு உரியவை தவிர அதற்கு முன் உள்ள இதரத் துறைகளின் ஆவணங்களும் இக்காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவை தவிர டச்சு. டேனிஷ், மராத்தி, மோடி போன்ற பிற மொழி ஆவணங்களும் இக்காப்பகத்தில் பேணிக் காக்கப்படுகின்றன. பத்திரங்கள் அடமானப் பத்திரங்கள் போன்ற பெரும் மதிப்பு வாய்ந்த ஆவணங்கள் பாதுகாப்புப் பெட்டகங்களில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

இவ் ஆவணக் காப்பகத்தில் கீழ்க்கண்ட அரிய தொகுப்புகளும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

1 அரசுத் துறை அறிக்கைகள்

2. மக்கட் தொகைக் கணக்கெடுப்பு

3 சட்டமன்ற நடவடிக்கைகள்

4. மாவட்ட விவரச் சுவடிகள்

5 ஆங்கிலப் பேரரசின் கடிதப் போக்குவரத்தின் பிரதிகள்

6. குறிப்பேடுகள் முதலியன.

பாதுகாப்பு

இவ் ஆவணக் காப்பகத்தின் மிக முக்கிய நோக்கம் ஆவணங்களைப் பாதகாப்பதே ஆகும். இங்கு ஆவணங்கள் வரிசைப்படுத்தப்பட்டு அதற்கென அமைக்கப்பட்ட 'அட்டங்களில்' பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. ஆவணங்களில் படியும் தூசிகளை 'வாக்குவம் கிளீனர்' கொண்டு அகற்றப்படுகின்றன. கரையான், காளான் பூச்சிகள் வேதிமப் புகையூட்டி மூலம் புகையூட்டி அழிக்கப்படுகின்றன.

அஸிடேட்டாயில் மற்றும் டிஷ்யூ பேப்பர் என்ற இருவகைத் தாள்களைப் பயன்படுத்தி மேலொட்டல் இயந்திரத்தின் செப்பனிடப்படுகின்றன.

மூலமும்

ஆவணங்கள்

ரூ

மூல ஆவணங்கள் நாளடைவில் அழியக் கூடுமானால் இரண்டாவது மூல ஆவணங்களாகப் பயன்படுத்த நுண் நிழற்பட நகல்கள் எடுத்துப் பாதுகாத்து

38

காகிதச்சுவடி ஆய்வுகள்