உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வருகின்றனர். ஆய்வாளர்கள் அடிக்கடி ஆவணங்களைக் கையாள்வதால் ஏற்படும் அழிவினைத் தவிர்க்க அவர்களுக்கு மைக்ரோ பிலிம் நகல்கள் வழங்கப்படுகின்றன.

ஆய்வாளர்களின் ஆய்வுக்குத் தேவைப்படும் ஆவணங்களின் நகல்கள் உரிய கட்டணத்தின் பேரில் இக்காப்பகத்திலுள்ள நகலெடுக்கும் நவீன இயந்திரத்தினைப் பயன்படுத்தி நகல் எடுத்து வழங்கப்படுகின்றன.

வரலாற்று ஆய்வு

வரலாறு மற்றும் சமூக அறிவியல் ஆய்விற்கு ஆவணக் காப்பகத்தில் உள்ள ஆவணங்கள் அடிப்படைச் சான்றாக விளங்குகின்றன. உலகம் முழுவதிலும் இருந்து ஆண்டு தோறும் சுமார் 300 ஆய்வாளர்கள் இங்கு வருகை தருகிறார்கள். இவர்களில் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும். மாணவர்களும். வெளிநாட்டவரும் எழுத்தாளர்களும் அடங்குவர். இவர்களுக்கு ஆய்வு விதிகளுக்குட்பட்டு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன. 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஆவணங்கள் ஆய்வுக்கு வழங்கப்படுகின்றன.

விவரச் சுவடிகள்

இங்குள்ள மாவட்ட விவரச் சுவடிகள் அனைவருக்கும் மிகச் சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறது. இச்சுவடிகள் அந்தந்த மாவட்டத்தின் முழு வாழ்க்கையையும் பிரதிபலிக்கின்றன. தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களுக்கான விவரச் சுவடிகள் வெளியிடப்பட்டுள்ளன.

மாவட்ட ஆவணக் காப்பகங்கள்

மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட அலுவலகங்களிலும் உள்ள 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஆவணங்களை ஒன்று திரட்டி மதுரை, கோவை, கடலூர், திருச்சி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களிலும் மாவட்ட ஆவணக் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன.

நமது நாட்டில் புது தில்லியில் 'இந்திய தேசிய ஆவணக் காப்பகம்' உள்ளது. மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலக் காப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன. சில மாவட்டங்களில் மாவட்டக் காப்பகங்களும் ஏற்படுத்தப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன.

தஞ்சை மராத்திய மன்னர் கால ஆவணங்கள்

கி. பி. 1676 முதல் 1855 வரை தஞ்சாவூரை மராத்திய மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். அம்மன்னர்களின் அன்றாடச் செய்திகள், மக்களின் வாழ்க்கைச் செய்திகள். அவர்களுடைய சமுதாயச் செய்திகள் ஆகிய விவரங்களை அன்றாட நிகழ்ச்சிகளாக எழுதப்பெற்றுள்ள ஆவணங்கள் பல தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இவை மராத்திய மொழியில் மோடி எழுத்தில் எழுதப்பட்டுள்ளன. இவ்வரசர்களின் ஆட்சிக் காலத்தில் எல்லாக் ணக்குகளும், பிறவும் மராத்திய மொழியிலேயே மோடி எழுத்தில் எழுதப்பெற்றன: இவை மோடி ஆவணங்கள் என்று அழைக்கப் படுகின்றன. மிகக் குறைந்த அளவில் காகிதச்சுவடி ஆய்வுகள்

39