உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பெற்ற ஆவணங்கள் உள்ளன.

ஆய்வாளர்கள் சிலர் இம்மோடி ஆவணங்களை மொழி பெயர்த்து ஆய்வு செய்துள்ளனர். மேலும் சில தமிழ் ஆவணங்களையும் ஆய்வு செய்துள்ளனர். இவ் ஆய்வின் மூலம் மராத்திய அரசு முறை, அரசர் பற்றிய செய்திகள், அவ்வரசர்களின் அயல் நாட்டுத் தொடர்பு. வரவு செலவுகள். நீதி மன்றங்கள். கோயிற் பணிகள், கல்விப் பணிகள் ஆகியவற்றை அறிய முடிகிறது. மருத்துவம் இசை, நாடகம், நாட்டியம். சிற்பம். ஓவியம் போன்ற துறைகளில் அக்காலத் தஞ்சை மக்களின் மிகச் சிறப்பான வளர்ச்சியையும் அறிய முடிகிறது.

மத்திய மாநில அரசுகள் ஆற்ற வேண்டியவை

தனியார் நிறுவனங்கள, கோயில்கள். ஆதீனங்கள் மற்றும் திருச்சபைகளில் உள்ள தனியார் ஆவணங்கள் பற்றிய விவரங்களைச் சேகரிக்க வேண்டும். அவற்றைத் தொகுத்துக் கணிப்பொறி மூலமும் மின்னணுச் சாதனம் மூலமும் பாதுகாத்து வைக்க வேண்டும். அவற்றை ஆய்வாளர்களுக்குத் தடையின்றி வழங்க வேண்டும்.

பிறமொழி ஆவணங்களைத் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்து ஆய்வாளர்களுக்கு வழங்க வேண்டும்

நவீன ஆவணக்காப்பக வளர்ச்சிகளை அறிந்து அதற்கேற்ப ஆவணக் காப்பகப் பணிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமாகிறது. தேசிய, மாநிலக் காப்பகங்கள் கணிப்பொறி மூலம் இணைத்து ஆவணங்கள் தொடர்பான விவரங்களைத் தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டியதும் அவசியமாகிறது.

ஆவணக் காப்பகங்களில் காணலாகும் அரிய விவரங்கள் இணையத்தில் இணைவதன் மூலம் உலகெங்கிலும் இருக்கும் ஆய்வாளர்கள் எவ்விதத் தடையுமின்றி உடனுக்குடன் எளிதில் பெற்றுப் பயன்பெற முடியும். அதே போன்று நாமும் பிறநாட்டுக் காப்பகக் களஞ்சியத்தைப் பெற்றுப் பயன்பெறலாம்.

1.

ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள்

பெருமாள். பா. உலக நூலகங்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

1988

2 முத்துசாமி, எம் (ப.ஆ), நூலகம் நூல் வல்லோர். சென்னைப் பல்கலைக்கழக நூலக அலுவலர்கள் சங்கம், சென்னை. 1993.

3

4

தமிழ் நாடு ஆவணக் காப்பக வெளியீடு, சென்னை. 1992; வேங்கடராமையா.கே.எம். தஞ்சை மராட்டிய மன்னர்கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். 1984.

40

காகிதச்சுவடி ஆய்வுகள்