உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வே.சீதாலெட்சுமி

தேர்வுநிலை விரிவுரையாளர் ஸ்ரீ கா.சு.சு. கலைக்கல்லூரி

திருப்பனந்தாள்

ஸ்ரீ காசி மடம்

வரவு செலவு ஆவணங்கள்

நிகழ்காலச் செய்திகளையும், கடந்தகாலச் செய்திகளையும் எதிர்காலச் சந்ததியினருக்குப் பாதுகாத்துக் கொடுப்பது ஒரு நாட்டின். அரசின் தலையாய கடமையாகும். அதனாற்றான் பாரதி கூட, "எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவியும். சிந்தையில் ஆயிரம் எண்ணங்கள் வளர்த்ததும் இந்நாடு" எனப் போற்றுகிறார் போலும் இதனை முந்தைய காலத்தில் பாறைகளில், கோயில் சுவர்களில் கற்களில் பொறித்து வைத்தனர். பின்னரே ஓலைச்சுவடிகள் பயன்படுத்தப்பட்டு அவைகள் பாதுகாக்கப்பட்டன. ஜெர்மன் நாட்டைச் சார்ந்த ஹெல்லன்பர்க் என்பார்.

"கடந்த காலத்தில் உருவாக்கப்பட்டதும். ஒரு நிறுவனத்தின் நடைமுறைப் பத்திரங்கள் மற்றும் நடவடிக்கைகளை எதிர்காலச் சந்ததியினருக்காக ஒரு குறிப்பிட்ட இடத்தில் பராமரிப்புச் செய்வதே ஆவணக்காப்பகமாகும்.

என வரைமுறை செய்கிறார். முதலில் 1790ஆம் ஆண்டு பாரிசில் முதல் ஆவணக் காப்பகம் தொடங்கப்பட்டது. சென்னையிலுள்ள தமிழ்நாடு ஆவணக் காப்பகம் தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரியதும், பழமையானதும் ஆகும்.

காப்பகங்களில் அரசுத்துறை அறிக்கைகள், மக்கட்தொகைக் கணக்கெடுப்பு. சட்டமன்ற நடவடிக்கைகள், மாவட்ட விவரச் சுவடிகள், ஆங்கிலப் பேரரசின் கடிதப் போக்குவரத்தின் பிரதிகள். குறிப்பேடுகளாகிய அல்மெருக்ஸ், டைரக்டர்ஸ் அனைத்துப் பாடங்களும் அடங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடந்த நூற்றாண்டில் வெளியாகிய நூல்கள் யாவும் பாதுகாத்து வைக்கப்பட்டன.

சுவடி

சுவடி என்ற சொல்லுக்கு ஓலை, ஏடு. இதழ். தோடு. மடல், தந்திரம், தூக்கு. பனுவல். புத்தகம் எனப் பல்வேறு சொற்களை நூலுக்குப் பழந்தமிழர் வழங்கினர். சுவடிகளை நூலகம் போலச் சேர்த்து வைத்திருந்த இடம் 'சரசுவதி பண்டாரம்' எனப்பட்டது. 'சரசுவதி' நூலையும். 'பண்டாரம்' இடத்தையும் குறித்தன. பல்வேறு மொழிச் சுவடிகள் பாதுகாக்கப்பட்டன. இராசராசசோழனைப் 'பண்டாரந் காகிதச்சுவடி ஆய்வுகள்

41