உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திறந்துவிட்டான், பரிவு கூர்ந்தான்' எனக் குறிப்பர்.

காகிதச் சுவடி

முதன்முதலாகச் சீனாவில் கி. பி. 105இல் காகிதம் செய்யப்பட்டது. பின்னர் அராபியர் வழி ஐரோப்பாவில் பரவியது. இந்தியாவில் காகித ஆலை 1870இல் தொடங்கப்பட்டது. முதல் ஆலை வங்காளத்தில் அமைக்கப்பட்டது. 1920 முதல் இருபது ஆண்டுகட்கு இத்தொழில் சிறப்புற்றது. காகிதங்கள் வரவிற்குப் பிறகுஆவணங்கள் காகிதத்தில் எழுதி வைத்துப் பாதுகாக்கப்பட்டன. ஆவணங்கள் வழக்குகளில் முக்கியப்பங்கு வகித்தமையை. "ஆட்சியில், ஆவணத்தில். மற்றயலார்தம் காட்சியில்" என்ற பெரியபுராண வரியானது சாட்சியாக ஆவணம் இருந்தமையைக் காட்டுகிறது. அச்சுக்கலை கண்டுபிடிக்கப்படாத காலத்துக் காகிதங்களில் கையெழுத்தில் எழுதி ஆவணங்கள் பராமரிக்கப்பட்டன. இவை நிலம். கட்டிடம், தானதருமம். கொடுக்கல் வாங்கல். கடிதம், வரவு செலவு, நாட்குறிப்பு. அறிக்கைகள் எனப் பல்வேறுபட்டனவாக அமைந்தன.

அறிக்கைகள்

ஒரு அரசின், ஒரு நிறுவனத்தின், ஒரு கம்பெனியின் நிகழ்ச்சிகள். செயல்பாடுகள். வரவு செலவுகள் ஆகியவைகள் இதனுள் அடங்குவன. ஆண்டுதோறும் இவை தயாரிக்கப்படுவதன் நோக்கம் இலாப நட்டக்கணக்கை அறியவும், அதன் வழித் திட்டங்கள் போடுவதும், அதனை அமுலாக்கி நன்கு வளர்ச்சி பெறவுமேயாகும்.

மூலதனம்

ஒரு நிறுவனம் இயங்குவதற்கு, சிறப்பாக இயங்குவதற்குப் பொருள் தேவையாகிறது. மூலதனம் எதுவுமின்றி ஒரு நிறுவனத்தை நடத்துவது இயலாது. மூலதனத்தைக் கொண்டு பொருள்கள் உற்பத்தி செய்து, தேவைக்கேற்ப விலை நிர்ணயம் செய்து விற்கும் பொழுது கிடைக்கும் இலாபம் அந்நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்துகிறது. இவையாவும் திட்டமிடுவதாலேயே கிடைக்கப் பெறுகின்றன.

"எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்"

என்ற குறளுக்கேற்பத் திட்டமிடுதலே வெற்றியின் செம்மைக்கு வித்தாகும்.

மூலதனம் இருவகைப்படுகிறது. ஒன்று பொது மூலதனம், மற்றொன்று தனி மூலதனம். முன்னது ஒரு நிறுவனத்தின் எல்லாச் செலவுகட்கும் இதிலிருந்து பயன்படுத்துவது பின்னையது குறிப்பிட்ட ஒன்றிற்காக முதலீடு செய்து, அதற்கு மட்டுமே அதனைப் பயன்படுத்துவது ஆகும்.

அறக்கட்டளைகள்

மிகுதியும் தருமத்தை மனித சமுதாயத்தின் வளர்ச்சியை, உதவும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தப்படுவது. கோயில்கள் காகிதச்சுவடி ஆய்வுகள்

42