உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தர்மஸ்தாபனங்கள். திருமடங்கள் இத்தகைய அறக்கட்டளைகளை ஏற்படுத்தி, மனித மேம்பாட்டுக்கு உறுதுணை புரிந்தனர். கல்வி. நூல் வெளியீடு, அன்னதானம். மருத்துவம். பொதுநலப்பணிகள், சொற்பொழிவுகள். விழாக்கள், கோயில் பராமரிப்பு எனப் பல்வேறு நிலைகளில் இவ்வறக்கட்டளைகள் நிறுவப்பட்டன.

ஸ்ரீகாசிமடம்

ஸ்ரீ ஆதி குமரகுருபர சுவாமிகள் மொகலாய மன்னனிடம் நிலம் பெற்று ஸ்ரீகாசியில் குமாரசாமி மடம்' என்ற பெயரில் மடமொன்று நிறுவினார்கள். அதன் வழி மனித சமுதாயத்திற்கு அருட்கொடையும். அறக்கொடையும் நல்குகிறார்கள். கல்வி, சொற்பொழிவு, மருத்துவம். அன்னம் பாலிப்பு. கோயிற் பராமரிப்பு எனப் பல்வேறு நிலைகளில் பணிகள் தொடர்ந்தன.

ஸ்ரீகாசிவாசி தில்லைநாயக சுவாமிகள்

இவர்கள் கி.பி. 1756 வரையில் பட்டத்திலிருந்தனர். ஸ்ரீகாசி மடத்தின் ஆறாவது பட்டத்து சுவாமிகளாவர். கி. பி. 1720இல் திருப்பனந்தாளில் ஒரு மடத்தை நிறுவினார்கள். திருப்பனந்தாள் காசியிலுள்ள மடத்தின் கிளைமடமாதலின் இதற்கு ஸ்ரீகாசி மடம் எனப் பெயர் வழங்கப்பெற்றது. இவர்களும் இவர்கட்குப் பின் அருளாட்சி செலுத்துபவர்களும், காசி, திருப்பனந்தாள் என்று இரு இடங்களிலும் மாறி. மாறி அருட் செங்கோலோச்சுகின்றனர். அவ்வகையில் 19ஆவது பட்டம் ஸ்ரீகாசி மடத்தின் தலைவராக எழுந்தருளிய ஸ்ரீலஸ்ரீ காசிவாசி அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகளும் தமிழ்மொழி. தமிழிசை, சைவ சித்தாந்தம். திருமுறைகள் இவற்றின் ஆக்கங் கருதியும் பொது மக்கள் நன்மைகளை உத்தேசித்தும் அவ்வப்போது பல அறச் செயல்களில் மனமுவந்து பல அறக்கட்டளைகளை நிறுவினார்கள். அறுநூறுக்கும் மேற்பட்ட அறக்கட்டளைகளை நிறுவி ஸ்ரீகாசி மடத்தின் பெயரையும் புகழையும் நிலை நாட்டியுள்ளார்கள். சுவாமிகள் தம் குறிக்கோளுக்கு ஏற்ப. இவ்வறங்களை நன்கு பரிபாலித்து வரும் வகையில் நற்பெயரைச் சிறு மேலெழுத்தாக நிலைநாட்டத்தக்க முனி புங்கவரைத் தமக்குப்பின் தோன்றலாக நம் எஜமான் சுவாமிகள் எழுந்தருளினார்கள். சுவாமிகள் தம் முன்னோர் வழி நின்று அறக்கட்டளைகளைப் பாதுகாத்தும், காலச் சூழலுக்கேற்பப் புதுக்கியும். புதிய அறக்கட்டளைகளை நிறுவியும் அருட் செங்கோலோச்சி வருகிறார்கள்.

ஸ்ரீகாசி மடத்தின் வரவு - செலவு அறிக்கை

'ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை

போகா றகலாக் கடை"

குறள் நெறிக்கேற்ப ஸ்ரீகாசிமடம் தனது

உதவி இக்கட்டுரை ஸ்ரீகாசிமடத்தின் 19ஆவது அதிபர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி சுவாமிநாத சுவாமிகள் அருளாட்சியும், 20ஆவது அதிபர் ஸ்ரீலஸ்ரீ அருணந்தித் தம்பிரான் சுவாமிகள் அருளாட்சியும் நடத்தப்பெற்ற வரவு செலவுக் கணக்குகளின் ஒரு சிறு பகுதியை எடுத்து விளக்குகின்றது.

திட்டமிட்டு, மனித சமுதாய மேம்பாட்டிற்குப் வருவாய்க்கேற்பச் செலவுகளைத்

காகிதச்சுவடி ஆய்வுகள்

43