உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




vi

முனைவர் கதிர். மகாதேவன்

துணைவேந்தர் தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர் 613 005

அணிந்துரை

தமிழ்ப் பல்கலைக்கழகம் அரிய கையெழுத்துச் சுவடித் துறையைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது

எந்தவொரு நிகழ்ச்சியையும் மெய்ப்பிப்பதற்கு ஆட்சி, ஆவணம். காட்சி என்ற மூன்றும் தேவைப்படுகிறது; இம்மூன்றில் நடுவண் உளதாகிய ஆவணமின்றி வரலாறு அமையாது. தமிழ்ப் பல்கலைக்கழக அரிய கையெழுத்துத் துறையில் அமைந்துள்ள ஆவணங்களுக்குக் கொடுமுடியாகத் திகழ்வது மோடி ஆவணங்களாகும். 17. 18ஆம் நூற்றாண்டுகளில் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த மராத்திய மன்னர்கள் மோடி ஆவணங்களைப் பயன்படுத்தினர் தஞ்சை மராத்திய மன்னர்களின் வரலாறு, கலைகள், இலக்கியப் பணிகள். அக்கால அரசியல் சமுதாயம் போன்ற பலவற்றை அறிவதற்கு மோடி ஆவணங்கள் பயன்படுகின்றன. மராத்திய மொழியின் சுருக்கு எழுத்தாவது மோடி எனும் எழுத்தாகும். சுருங்கக்கூறின். தென்னிந்திய வரலாற்றை அறிவதற்கு மோடி ஆவணங்கள் பெரிதும் பயன்படுகின்றன

இத்தகைய சீரிய ஆவணங்களை அரசின் உதவியுடன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொகுத்து வைத்துள்ளனர் இவ் ஆவணங்கள் காட்சிக்கு அரியவை, ஆராய்ச்சிக்கு உரியவை. இவ் ஆவணங்களைத் துணிக்கட்டுகளாகச் சுருட்டிப் பாதுகாப்பாகத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் வைத்துள்ளனர் ஏறத்தாழ 730 துணி மூட்டைகளில் இந்த ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்டிலும் குறைந்தது 100 ஆவணங்கள் வரை உள்ளன. இவ் ஆவணங்கள் வரலாற்றின் பெட்டகம் ஆகும். இவை வரலாற்று மூலங்கள் எனலாம். இவற்றில் சமுதாய. சமய, பொருளாதார, அரசியல் நிகழ்வுகள் பதியப்பட்டுள்ளன. அன்றியும் அயல்நாட்டுத் தொடர்பு. நீதி மன்றங்கள். கோயிற் பணிகள், கல்விப் பணிகள் முதலியவைகளும் காணப்படுகின்றன இவ் ஆவணங்கள் ஆராயப்பட்டுப் பயனுடையவைகளை அச்சேற்ற வேண்டும்.

மேற்கண்ட சிறப்புகளைப் பெற்ற அரிய கையெழுத்துச் சுவடித் துறையில் கருத்தரங்கு நடத்துவது வரலாற்றுச் சிறப்பினை நல்குவதாகும்

பழமையைப் போற்றுவது. புதுமைக்கு வழி வகுக்கும்; பழமையை மறந்த எந்த நாடும் முன்னேறியது இல்லை. கருத்தரங்குகளில் பங்கு பெறும் பேராளர்கள் இவ்வாய்வினை மேற்கொள்ள வழி வகை செய்யின் இப்பல்கலைக்கழகம் சீர் பெற ஏதுவாகும். இத்தகைய ஆய்வுகளுக்கு இக்கருத்தரங்கைப் பயன்படுத்திக் கொள்வார்களாக!

14-03-2000

கதிர். மகாதேவன்