உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திருக்கயிலாய பரம்பரை சீர் வளர்சீர்

சிவப்பிரகாக பண்டாரச்சக்கிதி அவர்கள்

குருமகாசந்நிதானம்

.V

சிவமயம்

திருவாவடுதுறை ஆதீனம்.

திருவாவடுதுறை - 609803. (நாகை மாவட்டம்)

நாள் 22-1-2000

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அனேகன் இறைவன் அடிவாழ்க

வாழ்த்துரை

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் பழமையையும் புதுமையையும் சிறப்பாகப் போற்றிச் செயலாற்றி வருகிறது. மொழிக்கென உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் என்ற பெருமையை உடையது. மற்றைப் பல்கலைக்கழகங்கள் கற்றல் கற்பித்தல். ஆராய்ச்சி என மூன்றைக் கொண்டு விளங்குவன. ஆனால் இப்பல்கலைக்கழகம் ஆராய்ச்சிக்கென்றே நிறுவப்பட்ட தனிச்சிறப்புடையது.

சிறப்பாக இந்தியாவிலேயே இந்தப் பல்கலைக்கழகத்தில்தான் அரிய கையெழுத்துச் சுவடித்துறை என்ற தனியொரு துறையமைந்து செயற்படுவது சிறப்பினைத் தருவதாகும். இத்துறையின் சார்பில் வரும் மார்ச்சுத் திங்கள் 20.21 ஆகிய இரு நாட்கள் நடைபெறும் கருத்தரங்கில் பேராளர்களின் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தல் மகிழ்வினைத் தருகிறது.

தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடக்க காலம் முதல் இன்றுவரை நமது ஆதீனத்தில் விளங்கும் சரசுவதி மகால் நூல் நிலைய ஆய்வு மையத்தில் உள்ள அரிய காகிதக் கையெழுத்துச் சுவடிகள், அச்சுப் புத்தகங்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள் ஆகியவற்றைப் படியெடுக்க அவ்வப்போது உத்வி வருகின்றது. இவைகள் யாவும் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடுகளில் பல நிலைகளாக வெளிவந்துள்ளதை மக்கள் அறிவர்.

சிறப்பிற் சிறப்பாக.அரிய கையெழுத்துச் சுவடித்துறைத் தலைவர் முதுமுனைவர் ம.சா. அறிவுடைநம்பி அவர்கள் நமது ஆதீன நூல் நிலையத்தில் உள்ள அரிய காகிதச் சுவடிகளை ஆய்வு செய்து தனிப்புத்தகமாக எழுதித் திருமடத்தில் சமர்ப்பித்தமையைப் பாராட்டுகின்றோம்.

பல்துறைச் சிறப்புக்களைப் பெற்று விளங்கும் இப்பல்கலைக்கழகம் நடத்தும் அரிய கையெழுத்துச் சுவடிக் கருத்தரங்கம் சிறப்புற நடைபெறவும், பேராளர்களின் கட்டுரைகள் வருங்காலச் சந்ததியினர்க்குச் சிறந்த பயனை விளைவிக்கவும். இப்பல்கலைக்கழகத்தின் பெருமை உலக அளவில் சிறப்புற்று விளங்கவும் நமது ஆன்மார்த்த மூர்த்தி அருள்தரு ஞானமா நடராசப் பெருமான் திருவடி மலர்களைச் சிந்திக்கின்றோம்.