உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




iv

இக்கருத்தரங்கைச் சிறந்த முறையில் நடத்துவதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து நெறிகாட்டி அணிந்துரை வழங்கிச் சிறப்பித்த மாண்பமை துணைவேந்தர் முனைவர் கதிர் மகாதேவன் அவர்களுக்கு முதற்கண் நன்றி பாராட்டுகின்றோம்.

இக்கருத்தரங்கத்திற்கு முனைவர் கி. சுந்தரமூர்த்தி அவர்கள் மையக் கருத்துரை வழங்குவதற்கு இசைவு தெரிவித்துள்ளார். சுவடித்துறையில் பட்டறிவும் ஆர்வமும் மிக்க பேராசிரியர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

காகிதச் சுவடி ஆய்வு மலரை வெளியிட்டுக் கருத்தரங்கத்தைத் தொடங்கி வைப்பதற்கு இசைவு தந்தவர் எங்கள் துறையில் பணியாற்றியவரும், மெக்கன்சி சுவடியில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவருமாகிய தமிழ் வளர்ச்சித்துறையின் இயக்குநர் முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

இலக்கிய இலக்கண வரலாற்று ஆய்வுகளுக்கு மூலமுதற் காரணமாய் விளங்கும் காகிதச் சுவடிகளையும் ஆய்வு செய்து கன்னித்தமிழ் நலம் காக்க உறுதுணையாவோம் என்னும் கொள்கை முழக்கத்தோடு ஆய்வுக் கட்டுரைகளை வழங்கிய அனைத்துப் பேராளர்களுக்கும் நன்றி பாராட்டுகின்றோம்.

ஆய்வுக் கட்டுரைகள் கணினியில் அச்சுப்பதிவம் எடுக்கும் காலத்தில் அவற்றை மெய்ப்புத் திருத்தம் செய்வதற்கு உதவி புரிந்த எங்கள் துறையைச் சார்ந்த ய்வாளர்கள் செல்வி பா. உஷாராணி. செல்வி த. அமுதா. செல்வி க.தனலெட்சுமி ஆகியோர்க்கு நன்றி பாராட்டும் கடப்பாடுடையோம்.

உரிய காலத்தில் கணினி மூலம் அச்சுப்பதிவம் எடுத்துக் கொடுத்த திரு அ. சீவமூர்த்தி (கிரிஜா ஒளியச்சு மையம், தஞ்சாவூர்) அவர்களுக்கும். அச்சேற்றம் செய்து கொடுத்த திரு சா. திருமாவளவன் (அமுதச்சகம், மதுரை) அவர்களுக்கும் எமது நன்றியை உரித்தாக்குகின்றோம்.

காகிதச் சுவடி சேர்ப்போம். கன்னித் தமிழ் நலம் காப்போம். வரலாற்றுலகிற்கு வளம் சேர்ப்போம் தமிழ் மக்களின் பண்பாட்டினைப் பாரெல்லாம் பறை சாற்றச் சூளுரைப்போம். அனைத்திற்கும் மேலாகக் காகிதச் சுவடியியல் கருத்தரங்கம் மாநில அளவில் சீரோடும் சிறப்போடும் நடைபெறுவதற்குத் தோன்றாத் துணையாக இருந்துவரும் திருவருளை நினைந்து வாழத்தி வணங்குகின்றோம்

தஞ்சாவூர் 613 005

தி.ஆ. 2031 பங்குனி 27 10-03-2000

முதுமுனைவர் ம. சா. அறிவுடை நம்பி முனைவர் சி. இலட்சுமணன் (பதிப்பாசிரியர்)