உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உணரவியலாதவாறு சிதைந்தும் குறைந்தும் உள்ளது

(இ) அடுத்துத் தருமபுர ஆதீனம் கீழ்த்திசைப் பல்கலைக்கல்லூரி தருமபுரம் தமிழ்த்துறைத் தலைவர் மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர் 'திருக்குறள் உரைவளம் காமத்துப்பாலை 25ஆவது மகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆணையின்வண்ணம் ஜன்ம நட்சத்திர அணிமலராக 28-10-1952இல் வெளியிட்டுள்ளனர். இவ்வுரைப் பதிப்பில் மணக்குடவர், பரிமேலழகர், பருதி. காலிங்கர், பரிப்பெருமாள் முதலான ஐவரின் உரையைமட்டும் ஆய்ந்துள்ளமையும் தெரிய வருகின்றது.

1.

இப்பதிப்பு வெளிவர ஒப்புநோக்கக் கிடைத்த ஏடுகள் பலவாகும்:-

பொ.பழனியப்பபிள்ளை பதிப்பித்த பரிப்பெருமாள் - காலிங்கர் உரைப்

பிரதிகள்

2. வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் பரிதியார் உரை 1

3.வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டரின் காலிங்கர் உரை 1

4. இலக்கண விளக்கம் சோமசுந்தர தேசிகர் வீட்டுக் கையெழுத்துப் பிரதி 1. - இதனைத் தேசிகர்க்கு ஈரோட்டு அறிஞர் ஏ. கல்யாணசுந்தர தேசிகர் அவர்கள் அளித்துள்ளார்.

5. சைவ எல்லப்ப நாவலர் மாளிகைப் பிரதி - பரிமேலழகர் உரை 1

6. தருமபுர ஆதீனத்துப் புத்தகசாலைப் பிரதி பரிமேலழகர் உரை 1 முதலானவற்றைச் சுட்டலாம்.

மேலும் விடுபட்டதும் சிதைந்ததுமான அறத்துப்பால் பகுதி முழுமையும் ஆதீன வெளியீட்டில் வந்துள்ளன. 9-9-1951இல் திருக்குறள் உரைவளம் பொருட்பால் - தெய்வசிகாமணிக் கவுண்டர் அளித்த ஏட்டின் உதவியால் வந்துற்றது.

(ஈ) திருப்பனந்தாள் திருமடம் : தருமபுரம் ஆதீனத்தின் உரை விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டு திருமடத்தின் அதிபரின் அருளாணையின்வண்ணம் 1959இல் சில திருத்தங்களுடன் (கே. எம். வேங்கடராமையா - பட்டுசாமி ஓதுவார் ஆங்கில உரைக் குறிப்புகளுடன்) 'திருக்குறள் உரைக்கொத்து - பொருட்பால்' வெளிவந்துற்றது.

அடுத்து.

1969இல் திருப்பனந்தாள் திருமடத்ததிபரின் அருளாணைவண்ணம் திருக்குறள் உரைக்கொத்து - அறத்துப்பால்' வெளிவந்துற்றது. இவ்வாறு திருக்குறள் உரைப்பதிப்பிற்கு ஓலைச்சுவடி மற்றும் கையெழுத்துப் பிரதிகளாம் ஏடுகளையும் தமிழாக்கத்திற்கு அளித்துதவிய தமிழ் நெஞ்சங்களை மறக்கவியலாது. காலிங்கர் உரையடங்கிய ஓலைச்சுவடியை (மீண்டும்) நிழற்படம் எடுத்து. இக்கட்டுரைப் பார்வையாளர்கள் கண்டு மகிழ்வுறும்வண்ணம் இணைத்துள்ளேன். தொன்மையான இலக்கிய இலக்கணக் குறிப்புகள் அடங்கிய ஏட்டுச் சுவடிகளையும் - கையெழுத்துப் பிரதிகளையும் நம்மவர்கள் மறவாது போற்றிப் பாதுகாப்பார்களாக! இச்சிந்தனைக் களங்களை ஏற்படுத்திச் சிந்திக்கச் செய்த தமிழ்ப் பல்கலைக்கழகத்தினை வணங்கி மகிழ்வோம்!

காகிதச்சுவடி ஆய்வுகள்

61