உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேலும் சுவடியில் 'வடிவே துணை. 'வேணுவனேசன் துணை' என்றிருப்பதால் இவ்வேடு, திருநெல்வேலிப் பக்கத்தது ஆகலாம். அப்பகுதியிலிருந்து கிடைக்கும் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் குறிப்பிடும் காலம் 'கொல்லம்' ஆண்டாதல் பெரும்பான்மை.

'கொல்லம்' ஆண்டுடன் 625 சேர்ப்பின் (867+625) ஆங்கில ஆண்டு வருமாகையால் இவ்வேடு கி.பி 1492இல் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதமுடிகிறது.

மேலும் வரலாற்றடிப்படையில் நோக்கினால் மைசூர்ப் பகுதியிலிருந்து சமணர்கள் தமிழ் நாட்டில் சமுத்திரகுப்தன் காலத்திலிருந்து குடியேறியுள்ளனர். அவ்வகையில் கலிங்க நாட்டிலிருந்து 'காலிங்கர்' குடியேறிய பரம்பரையினரோ எனவும் சிந்திக்க வாய்ப்பேற்படுகின்றது.

பல்கலைக்கழகங்களின் பங்கு

(அ) சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்தான் ரா. இராகவ ஐயங்காரால் அளிக்கப்பெற்ற காலிங்கர் ஓலைச்சுவடியும். பரிப்பெருமாள் உரையடங்கிய கையெழுத்துப் பிரதிகளும் (எண் 4455 -ஓலைச்சுவடி: 012 கையெழுத்து) இன்றளவும் நூலகத்தில் உள்ளன

காமத்துப்பால் உரைக்கருத்துக்கள் மட்டுமே முழுமையாய் உள்ளன. 'அறத்துப்பால் குறைபாடுடையதாய் உள்ளது. பொருட்பால் ஓரளவு நிறைவாய் உள்ளது

எனவேதான் ஏனைய பதிப்புகள் போலக் காலிங்கர் உரை மட்டும் 'அறத்துப்பால் -பொருட்பால் - காமத்துப்பால்' என்ற முறையில் பதிப்பிக்க இடர்ப்பாடு அளிக்கின்றது.

'காமத்துப்பால்' முதற்கண் பதிப்பிக்கப் பெற்றுள்ளது. அடுத்து, 'பொருட்பால் அறத்துப்பால் குறைப் பதிப்புடன்' வெளிவந்துள்ளது. காலிங்கர் உரையடங்கிய ஒலைச்சுவடியோ கையெழுத்துப் பிரதியோ முழுமையாகக் கிடைத்தால்தான். காலிங்கர் மணியுரையை முழுமையாய் நாம் தமிழன்னையின் திருவடிகட்குக்

காணிக்கையாக்கலாம்.

(ஆ) திருப்பதி திருவேங்கடேசுவரன் கீழ்க்கலை ஆராய்ச்சிக் கழகத்தில் பொ. பழனியப்பபிள்ளை பணியாற்றியபோது அவரது முயற்சியால் திருக்குறள் - காமத்துப்பால் காலிங்கர் உரையும் - பரிப்பெருமாள் உரையும் ஒருங்கியைந்து 1945இல் வெளிவரலாயிற்று. 1948இல் 'பொருட்பால், அறத்துப்பால்' குறைப் பதிப்புடன் அவரால் வந்துற்றது.

இவற்றுள் காலிங்கர் உரைப் பிரதியில் அறத்துப்பால் முதல் தொடங்கி 31ஆம் அதிகாரம் ஆகிய வெகுளாமையில் - நகையுமுவகையுங் கொல்லுஞ் சினத்தின் என்ற குறள் வரையுள்ள 304 பாக்களுக்குரிய உரையுள்ள ஏடுகள் சுவடியில் காணப்படவில்லை. எஞ்சிய அறத்துப்பாற் பொருட்பாற் பகுதிகளிலும் உள்ள உரைதானும் செல்லரிப்புண்டமையால் பலவிடத்தும் உரைப்பொருள் காகிதச்சுவடி ஆய்வுகள்

60