உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வரலாறு

மு. இராகவ ஐயங்காரின் 'சாஸனத் தமிழ்க்கவி சரிதம்' (சென்னை 1937)- 'காலிங்கராயன்' என்ற பெயர்கள் அக்காலத்தில் பெரிதும் புலவர்களுக்கு வழங்கப்பட்டமையை வரலாறு காட்டும் என்கிறது.

ஓலைச்சுவடி உணர்த்தும் 'காலிங்கன்' பெயர்க்காரணம் வைத்து வரலாற்றினை நாம் ஓரளவு சிந்திக்கலாம்:-

தமிழகத்திற்கும் கலிங்கத்திற்கும் சங்க காலத்திலிருந்தே (கி. மு. 3க்கும் கி.பி. 2க்கும் இடைப்பட்ட) கடல்வழி வாணிப உறவு இருந்து வந்துள்ளது.

தமிழக வாணிகச் சாத்து' கி. மு. 3 முதல் கி. மு. 150 வரையில் கலிங்கத்திலேயே தங்கி வாணிபம் செய்துள்ளமையை 'ஹத்திகும்பா கல்வெட்டுச் சான்று பகரும்.

'கலிங்கம் என்னும் பருத்தி ஆடை' தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்பெற்றது. இச்சொல் தமிழில் பொதுவாகத் துணியைக் குறிக்கப் பயன்பட்டது. "இக்கலிங்கம் போனால் என்ன. சொக்கலிங்கம் உண்டே துணை" என்ற தனிப்பாடல் அடியும் கலிங்கத்தின் செல்வாக்கை வலியுறுத்தும். 'கலிங்கப்போர் கி. பி. 1093-94இல் நடைபெற்றது மறிவோம்.

சிலம்பின் 23ஆவது காதை (கட்டுரை காதை) கோவலன் முற்பிறப்பில் 'கலிங்கநாட்டுச் சிங்கபுரத்தில் பரதன் என்னும் பெயருடையவனாய் இருந்தான்' என்கின்றது. இவ்வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு அந்தந்த மொழியில் இலக்கியங்களும் படைக்கப் பெற்றுள்ளமை எண்ணலாம்.

எனவே ஓலைச்சுவடியில், 'காலிங்கன்' என்பதே சரியான பாடமாக ஏற்க வாய்ப்புள்ளது.

காலம்

ஓலைச்சுவடி மற்றும் 'கையெழுத்துப் பிரதி'களில் உரைகாரர்களின் வரலாறு தெரியவில்லை. கீழ்வரும் பகுதியால் ஓலைச்சுவடி எழுதப்பெற்ற காலத்தை ஒருவாறு ஊகித்து உணரலாம்:-

"நன்றாக. வடிவே துணை. வேணுவனேசன் துணை. குருபாதம். திருவள்ளுவர் முப்பாலும் எழுதிமுகிந்தது; பிள்ளை பட்டமுடையா பிள்ளையவர்களுக்குத் தீர்க்காயித்து உண்டாக வேணுமென்று எழுதி முகிந்தது. காலிங்கருடைய உரை எழுதினது 867 புரசொற்பதி வருடம் பங்குனி மாதம் 5௨ எழுதிமுகிந்தது. நன்றாக. தம்பிரான் தோழன் எழுதிமுகிந்தேன். நன்றாக "

என்றுள்ளது. இதனால் ஓலைச்சுவடி எழுதப்பெற்ற காலம் 867 புறசொற்பதி வருடம் பங்குனி மாதம் ஐந்தாம் தேதி என அறியலாம்.

காகிதச்சுவடி ஆய்வுகள்