உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1978-79இல் அடியேனும் எம். ஃபில். (தமிழ்) ஆய்விற்கென்று 'காலிங்கர் உரையடங்கிய ஓலைச்சுவடியை நிழற்படம் எடுத்து ஆய்வேடும் சமர்ப்பித்துள்ளேன். அது 1981இல் 'திருக்குறள் காலிங்கர் உரை' முதற்பதிப்பு நூலாய் வந்துள்ளது.

20ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதிக்கு முன்பு, பலநூறு ஆண்டுகள் ஓலைச்சுவடியிலேயே காலிங்கர் உரை இருந்து வந்துள்ளது

ஓலைச்சுவடியின் துணைகொண்டு பாடபேதங்களையும்', 'உரைக் கருத்துக்களையும்' கண்ணுறுகையில் பதின்மர் உரைகளில் காலிங்கர் உரை பரிமேலழகர்க்கும் பரிப்பெருமாள் உரைக்கும் முந்தையதாகவும் மணக்குடவர் உரைக்குப் பிந்தைய உரையாகவும் உள்ளது உணரவியலுகின்றது.

ஓலைச்சுவடி மிகவும் சிதைந்த நிலையில் உள்ளதால் இனிமேல் இதனைப் பார்க்கவியலாமல் போய்விடுமோ என்றெண்ணி எனது ஆய்வின்போது நிழற்படமெடுக்க வேண்டிய சூழ்நிலை (ஆர். டி. வேலு ஸ்டுடியோ. சிதம்பரம்) ஏற்பட்டது. சிதைவுறா ஓலைச்சுவடியொன்று கிடைக்குமேயானால் மணக்குடவர். பரிப்பெருமாள், பரிமேலழகர் உரைகள் போல அறம்-பொருள்-இன்பம்' என்ற இயல் முறை வைப்பில் காலிங்கர் உரையும் முழுமையாக வெளிவரப் பேருதவியாய் அமையும்

உரைவளம்

உரைக்கொத்துக்களில் காணப்பெறும் 'காலிங்கர் உரை* இதுதான் என்பது உறுதியாய் ஏற்கவியலாத நிலையும் ஏற்படுகின்றது. ஏனெனில். காலிங்கர் நடை. புலமை. பிண்டப்பொழிப்பு. அதிகார வைப்பு முறை - இவைகளில் தனித்தனி வேறுபாடுகள் ஏனைய ஒன்பது மணக்குடவர். தருமர். தாமத்தர், நிச்சர், பருதி.

பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள் உரைகளிலும் வேறுபட்டுள்ளன.

காலிங்கரின் உரைநயம் தனித்தன்மை வாய்ந்தமையை ஓலைச்சுவடியையும் எனது நூலையும் ஒப்பிட்டால் அறியலாம்.

வேறுபாடு

ஓலைச்சுவடியில் காலிங்கர்' என்றும். இதனை அடிப்படையாகக் கொண்டு தி பொ. பழனியப்பபிள்ளை பதிப்பித்த 'காமத்துப்பால், பொருட்பால்' ஆகிய பதிப்பிலும், திருப்பனந்தாள் காசித் திருமடத்தின் அதிபர் அருளாணையின்வண்ணம் வெளிவந்துற்ற உரைக்கொத்திலும் 'காலிங்கர்' என்றே பாடம் அமைந்துள்ளது. ஓலைச்சுவடியின் பாடமே சரியானதாக அமையலாம் என்பதையும் இக்கட்டுரையில் விளக்கியுள்ளேன்.

ஆயின் மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகரால் பதிப்பிக்கப்பெற்ற திருக்குறள் உரைவளத்திலும் சென்னைப் பல்கலைக்கழகத் திருக்குறள் ஆராய்ச்சிப் பகுதியினரால் வெளிவந்த 'திருக்குறள் யாப்பமைதியும் பாடவேறுபாடும்' (1971) என்ற நூலிலும் 'காலிங்கர்' என்றே பாடம் காணலாம்; இப்பாடவேறுபாடு குறித்து ஆய்வு செய்ய நேரிடுகின்றது.

58

காகிதச்சுவடி ஆய்வுகள்.