உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுமார் 40 ஆண்டுகளின் முயற்சியில் உருவானது 'செந்தமிழ்ப் பத்திரிகை" தமிழ்க் கல்வியிலும் தமிழாராய்ச்சியிலும் பேரவாக் கொண்ட தமிழ் மக்கட்கு உறுதுணையாய் நின்றது இப்பத்திரிகையே

தமிழ்ப்பணி யாற்றும் பெரும் முயற்சியின் பயனாகத் தமிழ்க் கல்வி புத்துயிர் பெறத் தொடங்கியது. பழமையைத் தேடும் முயற்சி கையாளப் பெற்றது மதுரையம் பெரும்பதியிலே ஸ்ரீ பாண்டித்துரைத் தேவரவர்கள் 'தமிழ்ச் சங்கம்' நிறுவினார். தமிழ் நாட்டின் அரிய நூல்களைத் தொகுக்கப் 'பாண்டியன் புத்தகாலயம் ஒன்றும் நிலைபெற்றது.

அச்சில் வாராத தமிழ் நூல்கள் நூற்றுக்கணக்காக இப்புத்தகாலயத்தில் தொகுக்கப் பெற்றன. இந்நிலையில்தான் சங்கச் செய்திகள் மற்றும் தமிழ்க் கல்வியைப் பரப்பச் செந்தமிழ் மாதப் பத்திரிகையொன்றும் பிரசுரிக்கப் பெற்றது.

சதாவதானம் முத்துஸ்வாமி ஐயங்காரின் சகோதரியார் திருப்பெயர் 'பத்மாஸனி அம்மாள். இவ்வம்மையின் திருக்குமாரரே மகாவித்துவான் ரா.இராகவ ஐயங்கார். இவ்வம்மையார் பாண்டித்துரைத் தேவர்க்கும் தமிழாசிரியரே.

தமிழ் நாட்டின் பற்பலவிடங்கட்கும் சென்று அவர்களுடைய முன்னோர்கள் ஈட்டி வைத்த அரும்பெறற் றமிழ்ச் செல்வங்களைப் பெற்றுப் பாண்டியன் புத்தகச் சாலையில் சேமித்து வைத்தற்கு அறிஞர்கள் முயன்று வந்தனர்: ஆய்விற்குரிய நற்செய்திகளை இவர்கள் தாமே தேடிக் கொண்டனர். இவ்வாறு. இத்தகு சான்றோர்கள் இலக்கண இலக்கிய ஆராய்ச்சிக்குத் துணை நின்றமையை நாம் மறக்கவியலாது.

பாதுகாப்புப் பெட்டகம்

மகாவித்துவான் பாஷா கவிசேகரர் ஸ்ரீ ரா. இராகவ ஐயங்கார் 5-3-1906, 17- 9-1937இல் எழுதிய கடிதங்களும் மற்றும் ரா. ராகவ ஐயங்கார் நல்கிய பரிப்பெருமாள் உரை கையெழுத்துப் பிரதிகளும் காலிங்கர் உரை அடங்கிய ஓலை மற்றும் ஏட்டுச் சுவடிகளும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்றளவும் உள்ளன. அதனை நான் அங்குப் பயிலும் காலத்தில் 1978-79இல் நேரில் கண்ணுற்றுள்ளேன்.

பாதுகாப்பதில் வல்லமை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நூலகமும் எனலாம் திருக்குறள் உரையாசிரியர் காலிங்கர் உரை அடங்கிய ஓலைச்சுவடியும். பரிப்பெருமாள் உரையெழுதப்பெற்ற. காகிதக் கையெழுத்துப் பிரதிகளும் பாதுகாப்பாய் இன்றும் உள்ளமை செட்டிநாட்டரசரின் பெருமைக்கு மேலும் அரண் சேர்ப்பனவாகும்.

ஆய்வுப்பணிகள்

காலஞ்சென்ற கல்வெட்டாராய்ச்சிப் புலவர் கே. எம். வேங்கடராமையா அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1978-79இல் திருக்குறள் ஆராய்ச்சிப் பிரிவில் பரிப்பெருமாள் உரையடங்கிய கையெழுத்துப் பிரதியை ஆய்வு செய்து நூல் படைத்துள்ளார் என்பதை ஆய்வர் உணர்வர்.

காகிதச்சுவடி ஆய்வுகள்

57