உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




துரை. லோகநாதன் தமிழ்த்துறை

ஸ்ரீ கா.சு.சு.கலைக்கல்லூரி திருப்பனந்தாள்

திருக்குறள் உரைப்பதிப்பு

ஓலைச்சுவடிகளும் கையெழுத்துப் பிரதிகளும்' ஆய்வுப் பேழைகளில் போற்றி நாளும் பாதுகாக்கப் பெறவேண்டியவை. 'சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றானை...... ' என்னும் தொடர்க் கருத்துக்கள் எண்ணத்தக்கவை.

அச்சுக்கோப்பு வாராத வேளையில் அறிஞர் பெருமக்கள், புலவர்கள் ஓயாது கற்றனர்; சிந்தித்தவற்றை ஓலைச்சுவடிகளிலும் கையெழுத்துப் பிரதிகளிலும் எழுதி வைத்தனர். இத்தகையோர் கூரிய அறிவு, நிரம்பிய கல்வி கேள்வி, அரிய ஆராய்ச்சித்திறன். இனிய மக்கட்பண்பு உடையோர்களாய் இலங்கினர் என்பதும் வெள்ளிடை ஓலைச்சுவடியும் பிரதிகளும் தரும் கருத்துக்கள் நேரில் 'வல்லார் வாய்க் கேட்டுணர்தலையொக்கும்.

அகத்தியர். கபிலர், பரணர், நக்கீரர், ஒளவையார், திருவள்ளுவர் போன்ற ஓலைச்சுவடி தொடர்புடையாரை என்றென்றும் தமிழ் நெஞ்சங்கள் மறவா. 'சீத்தலைச் சாத்தனார்' போன்றவர்களையும் மறக்கவியலாது.

செய்யுட்களும். உரைக் கருத்துக்களும் பண்டு ஓலைச்சுவடியிலேயே அமைந்துள்ளன செங்கோலோச்சிய மன்னர்களும் புலவர்களை மதித்துப் போற்றியுள்ளனர். சிதைவுற்ற நற்கருத்துக்களை மறுபதிப்பு நாம் செய்வது போலத் தக்கவர்களைக் கொண்டு மறு ஓலைச்சுவடியில் எழுதச் செய்தனர். இடைக்காலத்திலும் இம்முறை பின்பற்றப் பெற்றமையை 'நன்றாகத் தம்பிரான் தோழன் எழுதி முகிந்தேன்' என்னும் திருக்குறள் ஓலைச்சுவடிக் கருத்துக்கள் மெய்ப்பிக்கும்.

"திருக்குறள் உரைப்பதிப்பில் ஓலைச்சுவடியும் கையெழுத்துப் பிரதியும்" இடம்பெற்றுள்ள பாங்கை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பழமையைப் போற்றும் சான்றோர்கள்

ஓலைச்சுவடி மற்றும் கையெழுத்துப் பிரதியின் மகிமையைத் தமிழ் நெஞ்சங்கள் மறவாது நாளும் உள்ள வேண்டும் எனும் பேரவாவுடன், தேடித் தொகுத்து உயிர் ஊட்டியவர்கள் ஏராளம். 'செந்தமிழ்ப் பத்திரிகை'யின் முதன்மை ஆசிரியர் 'இராகவ ஐயங்கார்' ஆவார், இம்மாதப் பத்திரிகையின் உதவி ஆசிரியர் 'மு. இராகவ ஐயங்கார் ஆவார்.

56

காகிதச்சுவடி ஆய்வுகள்