உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆங்கிலேயர்களுக்கும் நவாபுக்கும் ரூ இருபது இலட்சம் கொடுத்துச் சமாதானத்தைப் பெற்றுக் கொண்டதாகவும் நாகப்பட்டினத்திலிருந்து பவழத் தீவுகள் என்றழைக்கப்பட்ட மும்பைத் துறைமுகத்துக்குக் கப்பல்களில் நமது நாட்டுச் சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இப்படிப் பலப்பலச் செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார் நாட்குறிப்பேட்டாளர்.

6.0. முடிவுரை

6. 1. பண்டைய ஆவணங்கள் நமது பண்பாட்டுக் கருவிகளாகும். அவைகளை மதிக்கவும், பாதுகாக்கவும், பின் பயன்படுத்தவும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். திருவேங்கடம் பிள்ளை நாட்குறிப்புகளை யார் ஆய்வு செய்தார்களோ தெரியாது. ஆனால் அவற்றில் ஒன்றுமில்லை என்று ஒரு பத்திரிகைச் செய்தியுள்ளது. இதன் விளைவு என்ன வென்றால். இந்த ஏடுகளை யாரும் தீண்டப்போவதில்லை என்பதே; இதன் முடிவு இந்த ஆவணம் வறிதே கிடந்து ஒரு நாள் அழிந்து போகும். ஆனந்தரங்கர் நாட்குறிப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடப் பட்டதால் அவைகள் இக்கதியை அடையவில்லை. அவைகளும் தமிழிலே மட்டும் இருந்திருந்தால், யாரும் அவற்றைப் படித்து விமர்சிக்க மாட்டார்கள். நல்ல வேளையாக ஆங்கிலேயர்கள் செய்த முயற்சியின் பயனாக ஆனந்தரங்கரின் நாட்குறிப்புகள் நற்கதி பெற்று விட்டன. இதைப் போன்றே திருவேங்கடம் பிள்ளை நாட்குறிப்புகளும் நற்கதி அடைய வேண்டும்.

55

காகிதச்சுவடி ஆய்வுகள்