உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திருவேங்கடம் பிள்ளையின் நாட்குறிப்பு அத்துணைச் சிறப்புப் பெறவில்லை என்று எழுதியுள்ளது. ஏன் இந்தச் செய்திகள் அன்னாளைய இந்தியச் சமுதாயத்தில் நடத்தப்பட்ட வெங்கொடுமைகளை எடுத்துக் காட்டவில்லையா? அரசும் அரசியலும் குடிமக்கள் வாழ்க்கையும் அந்தக் காலத்தில் எப்படி நடந்துள்ளன என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாகத் திருவேங்கடம் பிள்ளை குறிப்பிடவில்லையா?

அரசு

5.11.நாட்குறிப்பேட்டாளர் தரும் வேறு சில தகவல்களின்படிக் கொழும்பிலே கண்டி ராசாவுக்கும் ஹாலந்துக்காரர்களுக்கும் நடந்த சண்டையில் கண்டிராசாவுக்கு ஆதரவாகவும், ஹாலந்துக்கு எதிராகவும் அந்நாளைய காலனி செயல்பட்டு, சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள 300 கைதிகளை அந்த யுத்தத்துக்குத் தயார் செய்து அனுப்பியுள்ளது. கண்டிராசாதாம் இந்தப் போரிலே வெற்றிபெறத் தஞ்சாவூர் ராஜாவுக்குத் தன் மாமனைத் தூது அனுப்பி, காயல், தூத்துக்குடி மன்னார். நாகை இவ்விடங்களிலே டச்சுக்காரர்களுக்கு எதிராகக் கலகம் விளைவிக்க வேண்டிக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

5 12. தஞ்சை மன்னருக்கும் நவாப் முகமதலிக்கும் சமாதானப் பேச்சு நடைபெற்றதாகவும் அப்போது தஞ்சை மன்னர் அவரிடம் சமாதானமாகப் போக ரூபாய் பத்து இலட்சம் கொடுப்பதாக ஒப்புதல் தெரிவித்தார் என்றாலும் தாம் சண்டைக்குத் தயாராக இருப்பதாகவும். தஞ்சைப் பகுதியில் கொள்ளை அடித்தால் ஆற்காடு சுபா மற்றும் மைசூர்ச் சீமை வரை தாங்களும் கொள்ளையிடுவோம் என்று தஞ்சை ராஜா எச்சரித்ததாகவும் நாட்குறிப்பேட்டாளர் குறிப்பிட்டுள்ளார். தஞ்சை மன்னர் பிரதாப் சிங்கிற்கு. சென்னை கவர்னர் பிக்காட்டு வெகு தினசுகளாகக் கெடியாரம் முதலிய விலை உயர்ந்த பரிசுகள் ஒரு பல்லாக்கிலும் இருபது பேர் அப்பல்லக்குடன் சென்றதாகவும் கவர்னர் பிகாட்டும் உடன் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒரு பீரங்கியைத் தஞ்சையிலிருந்து 24 ஏர் மாடுகளுடன் கட்டி இழுத்துக் கொண்டு சென்னை சென்றதாக நாட்குறிப்பேட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.

5.13. முகமது யூசுப்கான் ஆங்கிலேயர்களையும், நவாப் முகமதலியையும் எதிர்த்துக் கொண்டு மதுரையில் பிரஞ்சுக் கொடியை ஏற்றி. இவர்களுக்கு எதிராகப் போர் தொடுத்த நாட்களிலே. நாகப்பட்டினம் முதலிய இடங்களில் துப்பாக்கி. பீரங்கிக் குண்டு, ஈயம், கெந்தகம் இவைகளை வாங்கி நாகூரில் சேர்த்து. அங்கிருந்து அதிராம்பட்டினத்துக்குப் படகில்

முயற்சித்தது பற்றிய செய்திகளைக் குறிப்ரை வழியாக மதுரையில் சேர்க்க

ஏற்பாடுகளை அவ்விடமிருந்த அமுல்தாரர் கனகசபை முதலியார் கண்டு. யூசப்கான் இங்கிலீசுக்கார மனுஷனாச்சே இவன் சத்துருக்களைச் சேர்ந்தவனாச்சுதே. என்று அவைகளை ஏற்ற விடாமல். தஞ்சை மன்னருக்கு எழுதியனுப்பியதாக நாட்குறிப்பேட்டாளர் குறிப்பிட்டுள்ளார். யூசப்கான். ஆங்கிலேயர் மற்றும் நவாப் முகமதலிக்குத் தெரியாமலே அவர்களைச் சார்ந்தவனாக் நடித்துக் கொண்டே போருக்கான ஏற்பாடுகளைச் செய்தான். கிழக்கிந்தியக் கம்பெனி ஆவணங்களின்படி இது சரியான தகவலாகவேயுள்ளது. இருப்பினும் மதுரையில் இவன் வெள்ளையரை எதிர்த்து முழுப்போர் தொடங்குவதற்கு முன்பாக. இவனது ரகசியம் வெளிப்பட்டு விடுகிறது. இதனால் தஞ்சை மன்னர் இவனுக்கு முன்பு செய்த உதவிகளை நிறுத்திக் கொண்டார் என்பது வரலாறு.

54

5 14. மேலும் ஒரு தகவலின்படித் தஞ்சை மன்னர் முன்வாக்களித்தபடி

காகிதச்சுவடி ஆய்வுகள்