உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




L

பார்ப்பது போல அந்த மோதிரத்தைப் பார்த்துக் கொண்டிருக்குமாறு கூறி. இரண்டு குதிரைகள் கொண்டு வந்ததில் ஒரு குதிரையை அவருக்குச் சம்மதியானதை யெடுத்துக் கொள்ளச் சொன்னார். இங்கே நடந்த விவாதத்தில். குறிப்பால் உணர்த்துகின்ற செய்திகள் பல. பாண்டிச்சேரி. அன்றைய நாட்களில் பிரிட்டீஸ் கைக்குள் இருந்தது. அப்போது ஆனந்தரங்கன். டியுப்ளே இவர்களது ஆட்சி அங்கே இல்லை. அங்குள்ள நிர்வாகம் மோசமாக இருந்தது. ஆங்கிலேய ஆட்சியையும் பிரஞ்சி ஆட்சியையும் ஒப்பிட்டுச் சில கேள்விகள் கேட்டு அதற்குப் பதிலும் தமது இருமொழியாளர் வெங்கடாசல அய்யனிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட நவாபு கந்தப்ப முதலியை யெச்சி பீங்கான் துபாஷி என்றும் வசை மொழிந்தான் என்று நாட்குறிப்பேட்டாளரால் குறிப்பிடப்பட்டுள்ளது.

5.8. 17, 04. 1762 முதல் 21. 12. 1763 காலத்தில் எழுதப்பட்ட நாட்குறிப்பில். கர்னாடக நவாப் முகமதலி பற்றிய செய்திகளில், ஆரணிக் கோட்டையை முகமதலி கைப்பற்றியதாகவும், அங்கிருந்து பெண்கள் அப்புறப்படுத்தப்பட்டதாகவும் நவாப் ஆட்சியிலே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதும் தெளிவாகிறது. இதே காலகட்டத்தில் மராட்டியத் தளபதி முராரிராவ் 3000 குதிரை பட்டாள வீரர்களுடன் தென்னகம் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். கி. பி. 1761 சனவரியில் பாண்டிச்சேரியை ஆங்கிலேயர் கைப்பற்றியதற்காக நவாப் முகமதலிக்கும். ஆங்கிலேய கவர்னர் பிகாட்டுக்கும் இலண்டனிலிருந்து பரிசுப் பொருட்கள் வந்ததையும் நாட்குறிப்பேட்டாளர் தெரிவித்துள்ளார்கள்.

5. 9. பாண்டிச்சேரி ஆங்கிலேயர்கள் கையில் வந்தபிறகு அங்கு குத்தகைகாரர்களை நடத்திய அன்னிதங்களை எழுத வேண்டுமானால் பாரதக் கதையை வியாசர் எழுதியது போல எழுதினாலும் அடங்காது. நூறு ஆண்டுகள் ஆகலாம். குடிமக்கள் படுகின்ற தொல்லைகள் அளவில்லை என்றும் குடிமக்கள் மாடு கன்றுகளை விற்றும் கொடுத்தும் கூட அவர்களால் வரிகட்ட வழியின்றி அடியும் உதையும் பொறுக்காமல். ஓடிப் போகின்றபோது. அவர்களது பெண்டிர்களைப் பிடித்து வைத்து மூலையிலே கிட்டிப் போட்டும். மரத்திலே கட்டி வைத்தும், புடவைகளை அவிழ்த்தும் மானபங்கப் படுத்தியும் அவமானம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் நாட்குறிப்பேட்டாளர் குறிப்பிடுகிறார்.

5.10. செஞ்சிக்கருகிலே ஒரு கிராமத்தில் நடந்ததாகக் கூறும் செய்தி மிகவும் வருத்தமானது. நமது தமிழ் மக்களின் சமூக வாழ்க்கை அன்று எவ்வளவு மோசமாக. அடிமைத்தனமாக அன்னியர்களின் பிடியில் இருந்தது என்பதும் தெரிய வருகின்றது. அவ்விடம் அமுல்தாரராக இருந்து ஒரு துலுக்கர். ஒரு பிராமணர் செலுத்தவேண்டிய வரிக்குத் தம் உடமைகளை விற்றுக் கொடுத்தும் அது காணாது போகவே. மேலும் 109 வராகன் கேட்டு அமுல்தார் ஆட்கள் அப்பிராமணனை அடித்ததாகவும். எங்கேயிருந்து தருவது என்று திருப்பிக் கேட்டபோது 'உன் பெண்டாட்டியை வித்துக்கொடு' என்று அந்த அமுல்தாரர் கூற. அந்தப் பிராமணன் தன் மனைவியிடம் வந்து சொன்னதும். அத்தொகைக்குத் தன்னையே எடுத்துக்கொள்ளச் சொல்லி அவள் சொன்னதாகவும் அதை அப்படியே அந்த அமுல்தாரரிடம் ஒப்படைத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார் நாட்குறிப்பேட்டாளர். இத்தகைய செய்திகள் நாட்குறிப்பில் இருந்தும் கூட, தினமணி (31. 08. 89) வெளியிட்டுள்ள செய்தியில் காகிதச்சுவடி ஆய்வுகள்

53