உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாசல்படியில் தமிழர் - உத்தியோகஸ்தர்கள் யேக கும்பலாக நின்றவண்ணம் நாட்குறிப்பேட்டாளரான திருவேங்கடம்பிள்ளை முன்னே சென்று உபசாரம் சொல்லி ரெண்டு எலுமிச்சம் பழம் குடுத்து உபசாரம் எழுதி வச்சிருந்த காகிதமும் கொடுத்தனர். கந்தப்ப முதலி பதிலுக்கு சலாம் பண்ணி எலுமிச்சை கொடுத்தார் என நாட்குறிப்பேட்டாளர் எழுதியுள்ளார். ரங்கபிள்ளைக்குப்பிறகு பாண்டிச்சேரி கவர்னருக்குத் துபாஷாக இருந்தவன் கந்தப்ப முதலி என்று தெரிகிறது. அவர் மூலமாக நாட்குறிப்பேட்டாளர்களும் ஏனைய முக்கிய சில நபர்களும் சென்று எலுமிச்சம் பழம் கொடுத்து மகஸரும் கொடுத்துள்ளனர். பதிலுக்குக் கந்தப்ப முதலி எலுமிச்சம்பழம் கொடுத்துள்ளது தெரிய வருகிறது.

55. அந்நாட்களில் கூலித் திட்டங்கள் குறித்துத் தமுக்கு அடித்து விளம்பரம் செய்துள்ளதாகத் திருவேங்கடம் பிள்ளை குறிப்பிட்டுள்ளார், அந்நாட்களில் அரசு ஊதியம். பிற தொழில்கள் செய்வோருக்கு எவ்வளவு சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது என்பதில் துபாசிகளுக்கு - 24 பணம். அம்பட்டனுக்கு - 4 பணம். வண்ணானுக்கு - 24 பணம் போலீசுக்கு - 24 பணம், சேவுகனுக்கு - 20 பணம். வெல்லத்துக் காரனுக்கு - 1/4 பணம். அதுக்கு குறைஞ்ச - 1 பணம், அதுக்கு குறைஞ்ச -3/4 பணம், முடாளுக்கு (முழு ஆளுக்கு) -/ பணம். சித்தாளுக்கு -16 பணம் என்று நாட்குறிப்பேட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.

5. 6. நம்மூர்க் கோயில்களில் பூசைகள் தொடங்குவதைக் கொடி ஏற்றித் தெரிவிக்கின்ற வழக்கத்தை, வெள்ளையர்களும் புரிந்து கொண்டு. பூசையில் கலந்துகொள்ளும் போது வரிசை வைத்து. மூன்று முறை துப்பாக்கியால் சுட்டு. இருபத்தொரு முறை பீரங்கி முழக்கம் செய்துள்ளார்கள். இச்செய்தியையும் நாட்குறிப்பேட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.

57. ஒரு தினம். ஆற்காடு நவாப் அவ்விடம் வந்தபோது. ஆனந்தரங்கரின் மரணத்துக்குப் பிறகு துபாஷாக நியமிக்கப்பட்டவனைப் பற்றிய விவாதம் நடந்துள்ளது. ஆனந்தரங்கனின் வாரிசுக்கு ஏன் இந்தப் பதவி அளிக்கப்படவில்லை என்பதையும் கேட்டு அதற்காகத் தாம் வருந்துவது போன்ற பாவனையில் தமது துபாஷிடம் கேட்டதற்கு. அங்கே பிரசன்னமாயிருந்த பிரஞ்சு அதிகாரியானவன். அதோ அங்கே கையில் தடியுடன் நிற்கும் கந்தப்ப முதலியே இப்போது துபாஷ் என்பதையும் ஆனந்தரங்கரின் பிள்ளை குறைந்த பருவத்தினராக இருப்பதால் அவனுக்கு இப்பதவி அளிக்கப்படவில்லை என்றும். இன்னும் சிறிது நாட்களில் அந்தப் பதவி அவர்களுக்கே சேருமென்று சொன்னபோது. நவாபு பர்ஷியன் மொழியில் தாம் அறிந்த வரையில் அவனுக்கு முப்பது வயதாகிறது. இன்னும் இப்பணிக்கு வழங்கப்படவில்லை என்றது சரியல்ல "எங்களுக்குள்ளே பெரிய உத்தர்விலே இருந்தால் (பெரிய பதவியானால்) அவர்கள் பிள்ளைகளுக்குக் கொடுத்து அவர்கள் பந்துக்குள்ளே பெரியவனாக இருக்கப்பட்டவனை விசாரிச்சுக் கொள்ளச் சொல்லி நடத்துகிறது (அதாவது மைனராக இருந்தால் கார்டியன் ஒருவனை நியமித்து அதன் பேரில் பதவியை நடத்திச் செல்வது) வெள்ளைக்காரர் கட்டாக நடப்பதா? அவர்களுக்குப் பந்துக்களை என்று கந்தப்ப முதலியைக் கேட்க. அவன் இல்லை என்று சொல்ல. இப்படிப் பேசிக்கொண்டிருந்துவிட்டு நவாபு தம் கைவிரலில் அணிந்திருந்த மோதிரம் ஒன்றினைப் பிரஞ்சு அதிகாரிக்கு மாட்டிவிட்டு, நம்மைப்

52

காகிதச்சுவடி ஆய்வுகள்