உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

1749 முதல் 1795 முடியக் காண்கிறோம். ரங்கபிள்ளையின் காலத்தில் ஆற்காடு நவாபாக இருந்தவர் மேற்குறிப்பிட்டவரே. எனவே இந்த நாட்குறிப்புகள் வெளியிடப்பட்டால் ரங்கபிள்ளையின் நாட்குறிப்புகளுடன் செய்திகள் யாவும் சரியாக உள்ளனவா என்பதை ஒப்புநோக்கி அவற்றைத் தெளிவாக உணரமுடியும். அண்மையில் சில ஆண்டுகளுக்கு முன் பாஸ்கர சேதுபதியின் நாட்குறிப்பு (1868 - 1903) ஒன்று தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தின் பாதுகாப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இது தமிழும் ஆங்கிலமும் கலந்து எழுதப்பட்டுள்ளது.

4.3.31.08.1989 நாளைய தினமணியில் வெளிவந்துள்ள செய்தியின் அடிப்படையில் தமிழில் மற்றொரு நாட்குறிப்பேட்டினை வீரா நாயக்கர் எழுதியுள்ளதாகத் தெரிய வருகிறது. நாட்குறிப்புகள் 1778 - 1792 ஆண்டுக்குரியது. இதனைப் புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தார் வைத்துள்ளதாகத் தெரிகிறது.

6.0. திருவேங்கடம்பிள்ளை நாட்குறிப்பு - சில செய்திகள்

5.1. திருவேங்கடம்பிள்ளை நாட்குறிப்புகளில் கண்டுள்ள செய்திகளில் சிலவற்றை எடுத்துரைத்தல் அவசியமே! ஆனந்தரங்கரின் நாட்குறிப்புகளில் தற்கால வரலாற்றாளர்கள் சிலர் ஆய்வு நடத்தியுள்ளனர். ஆனால் திருவேங்கடம்பிள்ளையின் நாட்குறிப்புகள் இதுவரை தமிழிலோ ஆங்கிலத்திலோ அச்சாகவில்லை. அவை இன்றும் ஆவணமாகவே உள்ளது. ரங்கபிள்ளையை அடியொற்றியே இந்த நாட்குறிப்புகள் வரையப்பட்டுள்ளன. செய்திகளை அவரைப் போன்றே குறிப்பிட்டுள்ளார். ரங்கபிள்ளை துபாஷாக இருந்தார்; திருவேங்கடம் பிள்ளை அத்தகைய பதவியில் இல்லை.

5.2.1764 அக்டோபர் மாதம் 16ஆம் நாள் நடந்ததாக நாட்குறிப்பேட்டாளர் கேள்விப்பட்ட தகவலின்படி இங்கிலீசுக்காரர்களும் நவாபு முகமது அலிகானும் சேர்ந்து முகமது யூசுப்கானைத் தூக்கில் போட்டதாகத் தெரிவித்துள்ளார் வேறு ஆவணங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தேதியும் நிகழ்ச்சியும் சரியாகவே உள்ளன.

5. 3. ரங்கபிள்ளை தம் நாட்குறிப்புகளில் புதுச்சேரிக்கு வந்துபோகும் கப்பல்கள் குறித்து ஏராளமான தகவல்களைத் தந்துள்ளார். திருவேங்கடம் பிள்ளையும். ஒரு செய்தியில் புதுச்சேரிக்கு ஆங்கிலேயக் கப்பலில் வந்தவர்கள் அளித்த தகவல்களின்படி. ஆறு பிரஞ்சு தேசத்துக் கப்பல்கள் மொரிசியஸ் தீவு சேர்ந்துள்ளதாகவும். 1765 சனவரியில் அவைகள் பாண்டிச்சேரி வந்தடையுமென்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு செய்தியில் அக்டோபர்த் திங்களிலே புரட்டாசி) சென்னையிலே யேழு இடி வீழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அவைகள் லிங்குசெட்டி வீட்டிலும் கிருஷ்ணப்ப நாயக்கன் தோட்டத்திலும் சமுத்திரத்திலும், கோட்டையிலும், பெத்தநாயக்கன் பேட்டையிலும். முத்தியால் பேட்டையிலும் வீழ்ந்ததாகக் கூறியுள்ளார்.

5,4. மற்றொரு செய்தியில், தை மாத 'சனிவாரத்திலே அந்த விடுதியில்

8. B. S. Baliga, Studies in Madras Administration Vol. I. 1960, p. 328. காகிதச்சுவடி ஆய்வுகள்

51