உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2.0. முதல் நாட்குறிப்பேட்டாளர்

2.1. ஆனந்தரங்கர் சுமார் 25 ஆண்டுகள் எழுதி வந்த நாட்குறிப்புகள் 17 தொகுதிகளாகப் பிரஞ்சு தேசத்தில் பாரீஸ் தேசீய நூலகத்தில் தமிழ்ப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளன. இதைச் செய்தவர் எம். எம். இ. ஆரியல் என்பவர் (He was the conservator of the Archives of French India) இந்த நாட்குறிப்பு பற்றிக் குறிப்பிடும்போது.

"Rangapillai's Diary' a Unique work, the translation and publication of which was Sanctioned by Government as a Service and an encouragement to Literory and historical Research"

என்கின்றார். இந்த நாட்குறிப்புகள் யாவும் அறிஞர் ஆனந்தரங்கர் மறைந்து பல ஆண்டுகள் கழிந்தபிறகு. 1846இல் எம். காலியஸ் (M. Gallois Montburn) என்ற தமிழ்ப் பேராசிரியரால் வெளிக் கொணரப்பட்டது. தற்போது இவை 37 தொகுதிகளாகத் தமிழ் நாடு ஆவணக் காப்பகப் பொதுத்துறை (பல்வகை ஆவணங்களில் உள்ளன.5

3.0. திருவேங்கடம்பிள்ளை நாட்குறிப்பு

3.1 ஆனந்தரங்கம் பிள்ளையைத் தொடர்ந்து. அவரைப் போன்றே நாட்குறிப்புகள் எழுதியவர். திருவேங்கடம்பிள்ளை என்பவர். இவர் ரங்கபிள்ளையின் இளைய சகோதரரின் மைந்தரேயாவார். இவர் எழுதிய நாட்குறிப்புகள் யாவும் காகிதத்திலேதான் உள்ளன. அவை, 11 ஏப்ரல் 1762 முதல் 21 டிசம்பர் 1763 முடிய முதல் தொகுதியிலும், 28 அக்டோபர் 1762 முதல் 26 செப்டம்பர் 1764 முடிய இரண்டாவது தொகுதியிலும், 16 செப்டம்பர் 1964 முதல் 25 சூன் 1768 முடிய மூன்றாவது தொகுதியுமாகச் சுமார் 473 பக்கங்களில் உள்ளன. இவை பொதுத் துறையில் பல்வகை ஆவணத் தொகுதிகளில் தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் இருக்கின்றன.

6

4. 0. பிற நாட்குறிப்பேட்டாளர்கள்

4 1. தவிர, நெல்லை சவரிராயபிள்ளை. அவரது 35ஆவது வயது முதல் எழுதி வைத்த நாட்குறிப்புகளும் கடிதங்களும் இதில் சேரும் (1836 முதல் 1874 முடிய அவைகள் அச்சில் வெளிவந்துள்ளன. இதில் சவரிராய பிள்ளையின் வரலாறும் அக்காலத்திய சமூக வாழ்க்கை பற்றிய சில குறிப்புகளும் எழுதப்பட்டுள்ளன.

7

4. 2. அடுத்து ஆற்காடு நவாப் முகமதலி எழுதியுள்ள "நவாப் வாலாஜா நாட்குறிப்புகள்” இவை பெர்ஸியன் மொழியில் உள்ளன. இவரது ஆட்சிக் காலம் 4 G.O. Ms. No. 1552 Public Dept. it 25. 11. 1897, of Govt. of Madras.

5. Supplemental Catalogue of the Fort St. George Records, Tamil Nadu Archives, Chennai - 8, By B, S. Baliga (1936)

6. Supplemental Catalogue of Fort St. George Records, Tamil Nadu Archives, Egmore, Chennai - 8, By B. S. Baliga

7

சவரிராயபிள்ளை சரித்திரம், இரண்டாம் பாகம் (1900).

50

காகிதச்சுவடி ஆய்வுகள்