உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ம. செந்தூர் பாண்டியன் ஆராய்ச்சி அலுவலர் மாவட்ட ஆவணக் காப்பகம் மதுரை

திருவேங்கடம் பிள்ளை தமிழ் நாட்குறிப்பு

1.0. முன்னுரை

1. 1. 'நாட்குறிப்புகள்' என்று நாம் குறிப்பிடுவது ஒருவகையில் இலக்கியக் கூறு படைத்ததாக உள்ளது. காகிதங்களில் எழுதப்பட்ட நாட்குறிப்புகள் சிலவற்றையே நாம் கண்டிருக்கிறோம். அவை 16ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் நமக்கு அறிமுகமாகியுள்ளன. அறிஞர் ஆனந்தரங்கபிள்ளை நாட்குறிப்புகள் எழுதி வந்தவர்களில் ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறார். இதுபற்றி வாசுகி என்பவர்.

"ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு இந்தியாவில் முதல்முதல் எழுதப்பெற்ற சிறப்பினை உடையது"

என்று தம் நூலில் குறித்துள்ளார்.1 அவர் எழுதிய நாட்குறிப்புகள் இன்றளவும் சிறந்த ஆராய்ச்சிக் குரியவனாக உள்ளன.

1.2. இவரது நாட்குறிப்பினைத் திறனாய்வு செய்து.

"அதனைத் தமிழ் உரைநடை வளர்ச்சியின் மற்றொரு 'மைல் கல்'"

என்று அதே ஆசிரியர் தமது கட்டுரை2 ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்குறிப்புகளை ஆராய்ந்தோர் ஒரு சிறந்த தமிழ் உடைநடையை ரங்கபிள்ளை எழுதியுள்ளார் என்பதைக் குறிப்பிட மறந்துவிட்டனர். ஆனால் இவரது காலத்தில் வாழ்ந்த வீரமாமுனிவரின் (1680 - 1747) நூற்கள் சிலவற்றை 'உரைநடை நூல்களாக எழுதினார் என்று பாராட்டி மகிழ்கின்றோம். பெஸ்கியையும். நொபிலியையும் (1577- 1656) தமிழ் உரைநடையின் தந்தையர் என்றும், அவர்களைத் தொண்டுள்ளம் கொண்டவர்கள். ஆரம்ப கர்த்தர்கள் என்றும் பாராட்டுகிறோம். ஆனந்தரங்கர் நாட்குறிப்பேடுகளில் தமிழ் மொழியியல் ஆய்வுகள் இதுவரை நடத்தப்படவில்லை.

3

1. இரா. வாசுகி, ஆனந்தரங்கம்பிள்ளை அரசியல் சிந்தனைகள், புதுவைப் பல்கலைக்கழகம். 2. ஆவண அமுதம். சூலை செப்டம்பர் 1990. தமிழ்நாடு ஆவணக்காப்பக வெளியீடு. ப. 53. மு.வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு. பக். 240 241

3.

காகிதச்சுவடி ஆய்வுகள்

-

49