உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இவ்வாறு அக்காலத்தில் வரவையும் செலவையும் சீர் தூக்கிப் பார்த்து. மனித சமுதாயத்தை மேம்படுத்தும் வகையில் மடத்தில் நிர்வாகம் அமைந்திருப்பது போற்றத்தக்கது. அக்காலச் சமுதாயத்தின் நேர்மை, உண்மை. மடத்தாரிடத்து மக்கள் கொண்ட பாசம், பணத்தின் மதிப்பு இன்னபிறவான செயல்பாடுகளால் நிர்வாகம் சிறப்பாக நடந்தேறியுள்ளது. மடத்திற்குச் சொந்தமான கிராமங்களின் கீழுள்ள நிலங்கள், கட்டிடங்களின் வருமானம் குறைவின்றி மடத்திற்குக் கிடைத்து வந்தன. ஸ்ரீ காசிமடத்தின் கீழ் ஸ்ரீ காசிவாசி சுவாமிநாத சுவாமிகள் கலைக் கல்லூரியும். ஸ்ரீ குமரகுருபரர் கலைக் கல்லூரியும் (ஸ்ரீவைகுண்டம்). ஆடுதுறையில் மேல்நிலைப் பள்ளியும். திருப்பனந்தாளில் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளும். திருலோக்கியில் உயர்நிலைப்பள்ளியும், ஸ்ரீகுமரகுருபரர் ஆங்கில போதனா மேல் நிலைப்பள்ளியும் இயங்கி வருகின்றன என்பது பெருஞ்சிறப்பாகும்.

48

காகிதச்சுவடி ஆய்வுகள்