உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வி.மி.ஞானப்பிரகாசம். சே. ச.

மதுரை

பேராயர் லெயோனார்டு அவர்களின் நாட்குறிப்பு

முன்னுரை

ஒவ்வொரு நாளும் எழுதப்படும் நாட்குறிப்பு, எழுதுகிறவரின் செயல்களை, சிந்தனைகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இது பிறருக்காக எழுதப்படாமல், எழுதுபவருக்காகவே எழுதப்பட்டது. எனவே இது ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாகச் சொல்லும் பண்பு கொண்டது.

-

வெளிநாட்டில், மறுமலர்ச்சிக் காலத்தில் (Renaissance) தனி மனித மாண்பு வலியுறுத்தப்பட்ட போது. தனி ஒருவரின் எண்ணங்களை, உணர்ச்சிகளை எடுத்துரைக்கும் நாட்குறிப்பு மலரத் தொடங்கியது. தனி ஒருவரின் எண்ணங்களை இது கொண்டிருந்தாலும். இது சமூக வரலாறு. அரசியல் வரலாறு எழுதவும் உதவி செய்துள்ளது.

நாட்குறிப்பின் வரலாறு

1409இல் தொடங்கி 1431 வரை நடந்த நிகழ்ச்சிகளைக் கொண்ட ‘JOURNAL d'un BOURGEOIS DE PARIS' என்ற நாட்குறிப்பும், பிறகு வேறொருவரால் தொடரப்பட்டு, 1490 வரை எழுதப்பட்ட நாட்குறிப்பும், 6ஆம், 7ஆம் சார்லசின் ஆட்சி வரலாறு எழுத உதவின.

Memorials of the English Affairs என்ற நாட்குறிப்பு, வழக்கறிஞரும் பாராளுமன்றத்தினருமான புல்ஸ்ட்ரோடு வைப்லாக் (1605 75) என்பவரால் எழுதப்பட்டது. பிரஞ்சுக்காரரான மார்குவிஸ் தெ டாங்கோ (1618 -1720) எழுதின நாட்குறிப்பு வரலாற்று அறிவுக்குத் துணை புரிந்துள்ளது.

ஜான் எவலின் சாமுவேல் எழுதிய நாட்குறிப்பு 1699ஆம் ண்டு சனவரி முதல் தேதி தொடங்கி மே 31 வரை நடந்த நிகழ்வுகளை உள்ளடக்கியது. அவருடைய குறைகளையும் பலவீனங்களையும் சுட்டுவதோடு அன்றைய இலண்டன் வாழ்வு நீதி மன்றத்தில் திரைப்படத்தில், அவர் வீட்டில், அவரது கப்பல் துறை அலுவலகத்தில் வெளிப்பட்ட விதத்தைக் காட்டுகிறது

18ஆம் நூற்றாண்டில் ஜோனத்தன் ஸ்வீட் என்பவர் எழுதிய நாட்குறிப்பு. 1710 தொடங்கி 1713 வரை நடந்த நிகழ்வுகளைக் கொண்டது: த ஜர்னல் ட்டு ஸ்டெல்லா காகிதச்சுவடி ஆய்வுகள்

63