உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




என்ற தலைப்பில் அச்சிடப்பட்டது. இந்த நூற்றாண்டின் பிற்பகுதியில். தொடர்கதை எழுத்தாளர் வானி பர்னி எழுதிய நாட்குறிப்பு 1842 - 46இல் வெளியிடப்பட்டது. ஜேம்ஸ் பாஸ்வல்டு எழுதின 'ஜர்னல் ஆவ் எட்டுர்ட்டு த ஹெட்ரிடீஸ்' (1785) மிகவும் விரிவானது; ஆசிரியர் காலத்திலேயே அச்சிடப்பட்டது.

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாட்குறிப்பின்மீது ஆர்வம் வளர்ந்தது. இக்காலத்தில் பெப்பி என்பவர் நாட்குறிப்புப் போன்றவை வெளியிடப்பட்டன. 1890இல் சர் வால்ட்டர் ஸ்காட்டின் நாட்குறிப்பு அச்சேறியது. இது இலக்கிய நயம் மிகுந்தது டாரதி வர்ட்ஸ்வர்த் எழுதிய நாட்குறிப்பு அவர் இறந்த பின் (1855) அச்சிடப்பட்டது. ஹென்றிரி கிராப் ராபின்சன் எழுதிய நாட்குறிப்பு (1775 -1867) 1869இல் அச்சேறியது. இது பல இலக்கிய மேதைகளுடைய தொடர்பைக் காட்டுகின்றது.

மிகுந்தது டாரதி வர்ட்ஸ்வர்த் எழுதிய ந

ரஷ்யக் கலைஞர் மரி பாஸ்கிரிட் செவ் (1860 - 84) எழுதிய நாட்குறிப்பு அவர் இறந்த பின் அச்சிடப்பட்டது: 1877இல் அது புதுக் கிளர்ச்சியை உண்டு பண்ணியது அது போலவே 1888இன் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட கொன்கூர்ட் சகோதரர்களின் நாட்குறிப்பு பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியது.

20ஆம் நூற்றாண்டில் 1927இல் அச்சிடப்பட்ட ஜர்னல் ஆப் காத்தரின் மான்ஸ்வீல்டு. இரண்டு பகுதி கொண்ட ஜர்னல் ஆப் ஆந்திரே கைட் (1939, 1954) ஐந்து பகுதிகள் கொண்ட டயரி ஆப் விர்ஜினியா வுல்ப் (1977 - 84) போன்றவை குறிப்பிடத்தக்கவை.

தமிழ் நாட்டில் ஆனந்தரங்கம் பிள்ளை எழுதிய நாட்குறிப்பு வரலாற்றுச் சிறப்புடையது தமிழில் 7 தொகுதிகளாக இருந்த இந்த நாட்குறிப்பு. அண்மையில் ஆங்கிலத்தில் 12 தொகுதிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

கிறித்தவ மறைத்தொண்டர்களில் பிரஞ்சு நாட்டிலிருந்து வந்தவர்களில் பெரும்பாலோர் நாட்குறிப்பு எழுதும் வழக்கம் உடையவர்கள். அவர்களில் ஒருவர் மேதகு பேராயர் பீட்டர் லெயோனார்டு என்பவர்.

வாழ்க்கைக் குறிப்பு

லெயோனார்டு 1887இல் லக்சம்பர்க் நாட்டில் பிறந்தார். தந்தை பிரஞ்சுக்காரர். தாய் பெல்ஜியம் நாட்டார். இயேசு சபையின் பயிற்சி எல்லாம் பெற்றுக் குருவான பின், செண்பகனூரில் 4 ஆண்டுகள் இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியராகவும், 4 ஆண்டுகள் மெய்யியல் கற்பிக்கும் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். அதன்பின் திருச்சி, ஆயர் கோவிலில் பங்குத் தந்தையாக ஈராண்டும். திருச்சி தூய பவுல் இறையியல் கல்லூரியில் ஈராண்டு தலைவராகவும் உழைத்த பின், 1936இல் திருச்சி மறை மாவட்டத்தின் ஆயரானார். 1938இல் திருச்சியிலிருந்து மதுரை தனி மறை மாவட்டமாகப் பிரிக்கப்பட்ட போது. இவர் மதுரையின் பேராயரானார். அதிலிருந்து 1936 வரை அவரது ஆயர் பணி நீடித்தது

நாட்குறிப்புகள்

64

செண்பகனூரில் உள்ள இயேசு சபையாரின் அருஞ்சுவடிக் காப்பகத்தில்

காகிதச்சுவடி ஆய்வுகள்