உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இருக்கும் இவரது நாட்குறிப்புகள் ஐரோப்பியப் பயணத்தின் போது எழுதப் பட்டவை. அவை பின்வருமாறு:

. 1938 செப்டம்பர் தொடங்கி 1939 சூலை வரை

2 1950

3) 1962 (இரண்டாம் வத்திக்கான் சங்கம்)

4) 1963 (இரண்டாம் வத்திக்கான் சங்கம்)

5) 1964

1964 (இரண்டாம் வத்திக்கான் சங்கம்)

6) 1965 (இரண்டாம் வத்திக்கான் சங்கம்)

ஏன் எழுதப்பட்டது

பிரஞ்சு நாட்டு மறைத்தொண்டர்களின் இயல்பான வழக்கம், ஒவ்வொரு நாளும் அன்று நடந்த நிகழ்ச்சிகளை அப்படியே எழுதி வைப்பதாகும். இவ்வழக்கம் பிரஞ்சு ஆட்சியில் பணிபுரிந்த ஆனந்த ரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகளுக்கும் காரணமாய் இருந்திருக்கலாம்.

இயேசு சபையில் தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் இடையே ஒற்றுமை உண்டாக்க. கடிதப் போக்குவரத்து ஒரு சிறந்த வழியாகக் கருதப்பட்டது. சபைத் தலைவருக்கு ஆண்டுக்கொருமுறை எல்லா மாநிலத் தலைவர்களும் நிகழ்ச்சிகளின் அறிக்கை அனுப்ப வேண்டும். சில சமயங்களில் நான்கு மாதத்துக்கு ஒருமுறைகூடக் கடிதம் எழுத வேண்டியிருந்தது. மாநிலத் தலைவரின் பொதுவான கடிதத்துக்கு உதவியாக, ஒவ்வொரு இல்லத்திலும், நிறுவனத்திலும் நடந்த நிகழ்ச்சிகளை அந்தந்த இல்லத்தின். நிறுவனத்தின் தலைவர்கள் தெரிவிக்க வேண்டும். இந்த அறிக்கைக்கு அவர்கள் எழுதும் நாட்குறிப்புப் பெரும் உதவி. (The Constitution of the Society of Jesus, Translated by George E. Jauss S. J., The Institute of Jesuit Sources, St. Louis, U. S. A 1970, No. 629, 673-676). கட்டுரையின் பொருள்

பேராயர் லெயோனார்டு பலமுறை ஐரோப்பாவிற்குப் பயணம் மேற்கொண்டார். அப்பயணங்களில் குறிப்பிடத்தக்கவை. 1962 தொடங்கி 1965 வரை உரோம் நகரில் நடந்த கத்தோலிக்க ஆயர்களின் கூட்டமாகும். இது 2ஆம் வத்திக்கான் சங்கம் என்று அழைக்கப்பட்டது.

இச்சங்கம் நடந்த நான்கு ஆண்டுகளின் போது பேராயர் லெயோனார்டு ஒவ்வொரு நாளும் நாட்குறிப்பு எழுதியுள்ளார். அவற்றில் 1963ஆம் ஆண்டு ஆகஸ்டு 12 தொடங்கி டிசம்பர் வரை நடந்த சங்க அமர்வுகளின்போது இவர் எழுதிய நாட்குறிப்புகள் இக்கட்டுரையின் பொருள் ஆகின்றன. இவை அழகான ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன.

இந்த நாட்குறிப்புகளிலிருந்து மூன்று வகைச் செய்திகளைக் கோடிட்டுக் காட்டலாம். ஒன்று வத்திக்கான் சங்கத்தில் எல்லா ஆயர்களும் சிந்தித்த முறை, முடிவுக்கு வந்த முறை. அடுத்து இந்திய ஆயர்கள். தமிழக ஆயர்கள் தமக்குள் காகிதச்சுவடி ஆய்வுகள்

65