உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சந்தித்து, தம் நாட்டுப் பிரச்சினைகள்பற்றிச் சிந்தித்த 'முறை. மூன்றாவது, பேராயர் தம்மைப்பற்றி எழுதிய சில குறிப்புகள்.

1) வத்திக்கான் சங்கத்தின் முறை

கத்தோலிக்கத் திருச்சபை பாப்பரசர் என்ற ஒரு தலைவரைக் கொண்டு இயங்குகிறது. எந்த முக்கியமான முடிவுக்கும் இவரது இசைவு தேவை. எனவே 'கத்தோலிக்கத் திருச்சபை மக்களுக்கு அல்ல அதிகாரிகளுக்கே முதல் இடம் கொடுக்கிறது. இங்கு நடப்பது முடியாட்சி. குடியாட்சி அல்ல' என்ற குற்றச்சாட்டுக் கூறப்படுகிறது.

ஆயின், 2ஆம் வத்திக்கான் சங்கம் நடந்த முறை இக்குற்றச்சாட்டு உண்மைக்கு மாறானது என்பதைக்க் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக ஒக்டோபர் 1 ; 'திருச்சபை பற்றிய ஏட்டின் உள்ளடக்கம், அமைப்புப் பற்றிப் பேசினர். இதை வைத்துக் கொள்ளலாமா என்பது பற்றி வாக்கெடுப்பு நடந்தது. பெரும்பான்மையினர் 'ஆம்' என்றனர். சிலர் இதன் முதல் அதிகாரத்தில் சில சேர்க்கவும் சில நீக்கவும் வேண்டும் என்றனர்'.

ஒக்டோபர் 2: திருச்சபை பற்றிய ஏட்டின் ஒவ்வொரு வாக்கியமும் படித்துத் திருத்தப்பட்டது.

ஒக்டோபர் 3; அதே தலைப்புப் பற்றிய விவாதம் நடந்தது. பிற்பகலில் இதே பொருள் பற்றி ஓர் இறையியல் வல்லுநருடைய உரை நிகழ்ந்தது'.

ஒக்டோபர் 4 ; 'திருச்சபை ஏட்டின் முதல் அதிகாரம் விவாதித்து முடிந்தது'.

டிசம்பர் 3 : 'சங்கத்தில் பார்வையாளராக இருந்த ஒருவர் பேசினர்; சங்க அமர்வுகளில் பொது நிலையினர் பங்கு பெற அனுமதித்தற்குப் பாப்பரசருக்கு நன்றி கூறினர்'.

திசம்பர் 4 : 'பூசைக்குப் பின் சங்கத்தின் பொதுச் செயலர் வழிபாடு பற்றிய ஏட்டின் சில பகுதிகளைப் படித்தார். வாக்கெடுப்பு நடந்தது. நான்கு பேரைத் தவிர மற்றவர்கள் ஏற்றுக் கொண்டனர். மக்கட் தொடர்பு சாதனம் பற்றிய ஏட்டின் சில பகுதிகள் படிக்கப்பட்டன. ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் ஏற்றுக் கொண்டனர்'.

பிறகு இரண்டு ஏடுகளையும் பாப்பரசர் அங்கிகரித்தார்'.

இவற்றிலிருந்து வெளியாவது என்ன? கத்தோலிக்கத் திருச்சபை அதிகாரத்திற்கு முதலிடம் கொடுக்கிறது. ஆனால் இந்த அதிகாரம் பிறரைக் கலந்து கொள்ளும் அதிகாரம், மக்களுக்குப் பணிபுரியும் அதிகாரம் (not authority or freedom, but authority in the service of freedom. (Richard P. Mc Brien, Catholicism 3rd edition, U. S. A. P. 1190)

கிறித்தவ ஒற்றுமை

66

இச்சங்கத்தில் வெளியான மற்றொரு பண்பு கிறித்தவ ஒற்றுமையாகும்.

காகிதச்சுவடி ஆய்வுகள்