உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இதில் சீர்திருத்தச் சபையினர்

அழைக்கப்பட்டனர்.

பார்வையாளராக இருக்க

ஒக்டோபர் 17: ஆபட் பட்லர் என்ற இங்கிலாந்து நாட்டு ஆயர் மரியா பற்றித் தயாரித்த ஏட்டைப் படித்தார். அது சீர்திருத்தச் சபையினரும் ஏற்றுக்

கொள்ளக்கூடிய விதத்தில் அநதது. இலத்தீன் அமெரிக்க ஆயர்கள் இதே

பொருள் பற்றி வேறோர் ஏடு வந்திருந்தனர். இவர்கள் இங்கிலாந்து ஏட்டை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று எண்ணப்பட்டதால் சங்க அதிகாரிகள் அந்த இரண்டு ஏடுகளையும் இணைக்கும்படி ஆபட் பட்லரைக் கேட்டுக் கொண்டனர்.

நவம்பர் 16 : 'கிறித்தவ ஒற்றுமை பற்றி விவாதம் நடந்தது. பொதுவாக எல்லாரும் இசைந்தனர். சிலர் ஐயம் தெரிவித்தனர்.

டிசம்பர் 2: கிறித்தவ ஒற்றுமை பற்றிய விவாதம் முடிந்தது. கர்தினால் பெயர். ஆயர்கள் இணில் ஒத்துழைப்பு நல்கியதற்கு நன்றி கூறினார்.

இவ்வாறு எல்லாரும் ஒன்றாயிருப்பார்களாக | (யோவான் 17 21) என்ற இயேசுவின் வேண்டுதலுக்கிணங்க, 2ஆம் வத்திக்கான் சங்கம் கிறித்தவ ஒற்றுமைக்கு வழிவகுத்தது.

2) இந்திய, தமிழ் நாட்டுப் பிரச்சினை

எல்லாருக்கும் பொதுவான உணவு சமைக்கப்பட்டாலும் அது அவரவர் வயதுக்கும் உடல் நிலைக்கும் தகுந்தவாறுதான் ஏற்றுக் கொள்ளப்படும். 2ஆம் வத்திக்கான் சங்கக் கருத்துக்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்றவாறு தழுவி அமைக்கப்பட வேண்டும்.

ஒக்டோபர் 4 : பிற்பகல். இந்திய ஆயர்கள் கூடினர். சங்க ஏடுகளின் கருத்தை இந்தியக் கண் கொண்டு பார்க்க வேண்டும். இதற்கு ஒவ்வொரு வியாழனும் மாலை 5 மணிக்கு நாம் கூட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதில் முடிந்தவரை ஒருமனத் தீர்மானம் வேண்டும். நம்மில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, நம் கருத்தைச் சங்கத்திற்குத் தெரியப்படுத்துதல் வேண்டும்:

மேலும் இந்தியாவில் உள்ள எல்லாப் பகுதிகளும் ஒரேவிதப் பிரச்சினையைச் சந்திப்பதில்லை. எனவே பகுதி வாரியாகப் பிரதி நிதித்துவம் வேண்டும். எ. கா. (1) நிரந்தரத் திருத்தொண்டர் ஏற்படுத்துதல், இந்தியாவின் சில பகுதிகளுக்கு வேண்டியதாக இருக்கலாம். பிற பகுதிகளுக்கு வேண்டப்படாததாக இருக்கலாம். இதை அந்தந்தப் பகுதியின் பிரதிநிதி தெரிவிக்க வேண்டும்.

(2) மற்றொரு பொருள். இயேசுவின் தாய் மரியா பற்றிய சிந்தனை அல்லது கோட்பாடு. இது இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் ஏற்றதாகவே இருக்கும்'.

ஒக்டோபர் 6: 'தந்தை அமலோற்பவதாஸ் புதிய திட்டம் ஒன்று கொண்டு வந்தார். மறைப்பணி நிலையம் ஒன்று தொடங்கி அதில் குருக்களும் ஆயர்களும் பயிற்சி பெற உதவலாம். இது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. திண்டிவனம் இதற்கு ஏற்ற இடம். அங்கு வேதியர்களின் பயிற்சிக்குத் தேவையான நூலகம். பிற காகிதச்சுவடி ஆய்வுகள்

67