உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சாதனங்கள் உண்டு. இருவர் நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்கப்படலாம். மற்றவர்கள் பிற நிறுவனங்களிலிருந்து அழைக்கப்படலாம் என முடிவு செய்யப்பட்டது.

ஒக்டோபர் 10 : 'மாலை இந்திய ஆயர்கள் கூட்டம். அனைத்துலக நற்கருணை மாநாடு. 1964 திசம்பரில் இந்தியாவில் நடக்கும். இதற்கு வேண்டிய நிதி 40 அல்லது 50 லட்சம். கர்தினால் (சிரேசியஸ்) வெளி நாட்டு ஆயர்கள் பலரைச் சந்தித்து. உதவி கேட்கிறார். நாம் இந்தியாவில் நிதி திரட்ட முயலவேண்டும்.

ஒக்டோபர் 11: 'நான் தந்தை யா அ.லூர்து என்பவரைச் சந்தித்தேன். இந்தியத் திருச்சபையின் சிறப்புத் தேவைக்கு ஏற்ப நம் வழிபாட்டு முறையைத் தழுவி அமைத்தல் பற்றி ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்திருந்தார்".

மதத்தின் கடமை கொள்கை போதித்து, எண்ணிக்கை பெருக்குவது மட்டுமல்ல. மக்கள் இம்மையில் நல்வாழ்வு வாழ உதவி செய்வதுமாகும். இந்திய ஆயர்கள் பங்களுரில் மருத்துவக் கல்லூரி தொடங்குவது பற்றி. ஒக்டோபர் 10இல் பேசினார். ஓக்டோபர் 17இல் கூடிய கூட்டத்தில் வட இந்தியாவில் சில இடங்களில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்லா ஆயர்களும் உதவி செய்ய இசைந்தனர். எல்லா ஆயர்கள் பெயரிலும் கர்தினால் சிராசியஸ் ரூ. 12,000 கொடுத்து விட்டார். அதை மற்ற ஆயர்கள் பிறகு பகிர்ந்து கொள்வார்கள்.

'ஒக்டோபர் 30இல் இந்திய ஆயர்கள் ஒன்றாக இணைந்து பாப்பரசரைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றனர். இரவு 7 மணிக்கு நடந்த இந்த நிகழ்ச்சியில் பாப்பரசர் தம் உரையை ஆங்கிலத்தில் படித்தார். அடிக்கடி இத்தாலிய மொழியில் இடையிடையே பேசினார். அதைக் கர்தினால் கிராசியஸ் மொழி பெயர்த்தார். இந்தியா மாபெரும் நாடு. பல குலங்கள் இனங்கள் மதங்கள் கொண்ட நாடு. குறிப்பிடத்தக்க மறைப்பணி அங்குச் செய்யப்பட்டுள்ளது. அது இன்னும் வளர முயற்சி வேண்டும். மறைப் பணியாளர்களின் எண்ணிக்கை வளர்ந்து வருவது பாராட்டுக்குரிய எனப் பாப்பரசர் தம் உரையில் விவரித்துரைத்தார்.

பிற கிறித்தவர்களோடு ஒன்றுபட்டு வாழ வேண்டிய கடமை இன்னும் அச்சமயத்தில் தெளிவாகவில்லை. அதற்கு ஓர் உதவி கிடைத்தது. நவம்பர் 21 பிற்பகல் இந்திய ஆயர்கள் இயேசு சபையினரின் தலைமையகத்தில் கூடினர். கிறித்தவ ஒற்றுமை ஆணைக்குழுவின் தலைவர் கர்தினால் பெயா முதலில் பேசினார். பிறகு இறையியல் வல்லுநர் தந்தை பூம் கிறித்தவ ஒற்றுமையை விளக்கி, ஐயங்களைத் தீர்த்தார்.

வேண்டும்.

உரோமில் பேசி ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துகளை மக்களுக்குத் தெரிவிக்க

நவம்பர் 26 : பிற்பகல் இந்திய ஆயர்கள் கூடி, வத்திக்கான் சங்க நடவடிக்கைகள், கருத்துகள் பற்றி மக்களுக்குத் தெரிவிக்க. ஒரு பொதுச் சுற்றறிக்கை இறையியல் வல்லுநர்கள் எழுத வேண்டும். ஆயர்கள் தங்கள் கருத்தைத் தெரிவிக்க பிறகு (பழுத்த இறையியல் வல்லுநரான) தந்தை நாய்னர் அதைத் திருத்தி அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.

68

காகிதச்சுவடி ஆய்வுகள்