உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய ஆயர்கள் கூடினது போல் தமிழக ஆயர்களும் கூடினர். ஓக்டோபர் 5இல் இவர்கள் பேசியது : 'புதிய ஏற்பாட்டின் புதிய தமிழ் மொழி பெயர்ப்பு நடந்து கொண்டிருக்கிறது. இதைச் செய்யும் குழு மிகப் பெரியதாகத் தோன்றுகிறது. சிலர் போதும். மேதகு தாமஸ் வெர்னாண்டோ இதன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் ; (விவிலிய வல்லுநர்) தந்தை லெக்ரானோடு ஒரு சில மொழி வல்லுநர்களையும், சில பொது நிலையினரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இதைச் சீர்திருத்தச் சபையினரோடு சேர்ந்து செய்யலாமா என்ற கேள்விக்கு. இப்போது வேண்டாம் என்ற பதில் வந்தது. விவிலியத்தைப் பொறுத்தவரை நாம் சீர்திருத்தச் சபையினரோடு ஒத்துழைக்கத் தயாராக இல்லை.

இவ்வாறு இந்திய ஆயர்கள் பலமுறை கூடித் தங்கள் பிரச்சனைகளை மனந்திறந்து பேசி முடிவெடுக்க வாய்ப்புப் பெற்றனர்.

3) தம்மைப்பற்றிய குறிப்புகள்

நாட்குறிப்புகள், எழுதினவரின் தன் வரலாறு கூறும் கருவி. அவருடைய பண்புகளைக் காட்டும் கண்ணாடி எனலாம்.

பிறருக்குப் பணி செய்தல் பேராயரின் பண்பு. 1763 திசம்பர் 4இல் வத்திக்கான் சங்க அமர்வுகள் முடிந்த பின், இந்தியா திரும்பப் பேராயர் தயார்ப் பண்ணும் போது. இந்தியா எடுத்துச் செல்ல சிறு கட்டுகள் அவரிடம் கொடுக்கப்பட்டன. எ.கா. திசம்பர் 4இல், திருச்சி பவுல் இறையியல் கல்லூரியில் அடுத்த மார்ச் மாதம் குருவாகத் திருநிலைப்படுத்தப் படவுள்ள சகோ, கருணாகரன் கோரசுக்கு. ஹாலந்தில் உள்ள ஒரு குடும்பம் கொடுத்தனுப்பும் பூசை உடுப்புகள் கொடுக்கப்படுகின்றன. மற்றவர்கள் பாடுபட்ட சருபம். சிறிய சுருபம், படங்கள் அடங்கிய கட்டுகள் கொடுக்கின்றார்கள்.

டிசம்பர் 24: 'இன்னொரு ஊரில் இரண்டு நாள் தங்கியிருந்தேன். மதுரைக்குக் கொண்டு போக இன்னொரு பெட்டி கொடுத்தார்கள். சரி என்று ஏற்றுக் கொண்டேன்'.

வயதானவர்களின் பலவீனம் மறதியாகும்.

ஓக்டோபர் 20 : மிஷன் ஞாயிறு அன்று, போர்காத்தா லொரன்ட்டினா என்ற புதிய பங்குக்குப் பூசைக்குச் சென்றேன். மறுபடியும் மறதி. என் தொப்பியை. கோவிலுக்குப் பின்புறம் உள்ள, உடை அணியும் அறையில் வைத்து விட்டு வந்து விட்டேன். உறுதியாக நான் மூப்படைந்து வருகிறேன். மறதி வளர்கிறது . தொப்பி திரும்பி வந்து விட்டது.

என்

திசம்பர் 4இல் தம் அறைத் திறவு கோலை எங்கேயோ வைத்து விட்டதாக

எழுதுகிறார்.

திசம்பர் 26 ; மார்செய் என்ற நகருக்குச் செல்ல இரயில் நிலையத்தில் இருந்த போது, என் கட்டளைச் செபப் புத்தகத்தை வைத்து விட்டு வந்துள்ளேன் என்பது நினைவுக்கு வந்தது. தந்தை ரோக்கரி அதைப் பிறகு அனுப்பி வைப்பதாகச் சொன்னார். காகிதச்சுவடி ஆய்வுகள்

69