உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேராயரது ஆன்ம நிலை வெளிப்படுகிறது. 1964 சனவரி முதல் நாள் கப்பல் பயணத்தில் விடிந்தது. அதுபற்றி எழுதுகிறார்; கூச்சல் நிறைந்த ஒலி எழுப்பி மக்கள் புதிய ஆண்டை வரவேற்கின்றனர். இது தவறானதல்ல. எனினும் அறிவையும் உள்ளத்தையும் உயர எழுப்ப, கடவுளைப் புகழ. தாழ்மையோடு பாதுகாப்புக்கு வேண்ட இது உதவி செய்யவில்லை. இந்த மக்களுக்கு (இவர்களில் மிகப் பலர் கிறித்தவர் அல்லாதவர்கள்) இறைவன் மிகுந்த இரக்கம் காட்டுவராக.

முடிவுரை

பேராயர் லெயோனார்டு எழுதிய நாட்குறிப்புகள் பலவற்றில் உள்ள இச்சிறு பகுதி கத்தோலிக்கத் திருச்சபை முடிவெடுக்கும் முறையைக் காட்டுகிறது. இந்தியத் திருச்சபை ஆயர்களும், தமிழக ஆயர்களும் அன்று சந்தித்த பிரச்சனைகளைத் தெளிவாக்குகிறது. பேராயரின் சில பண்புகளின் கண்ணாடியாகின்றது. இது பெரிய செய்திகளும் சிறிய செய்திகளும் கொண்ட ஒரு களஞ்சியம் எனலாம்.

70

காகிதச்சுவடி ஆய்வுகள்