உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொ. நா. கமலா சிவகாசி

விருதை தந்த தமிழ் நூல்கள்

தோற்றுவாய்

இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் விருதுப்பட்டி என்றழைக்கப்பெற்ற விருதுநகரில் அச்சிடப்பெற்று வெளிவந்த தமிழ் நூல்களைப்பற்றிய ஆய்வு இவண் மேற்கொள்ளப்பெறுகிறது. கி. பி. 1921 முதல் கி. பி. 1935 முடிய வெளியான நூல்கள் பற்றிய செய்திகள் மட்டுமே தொகுக்கப் பெற்றுள்ளன. அவை பின்வரும் கருதுகோள்களின் அடிப்படையில் வகைப்படுத்தப் பெறுகின்றன.

1. விருதுப்பட்டியில் இக்காலகட்டத்தில் இரு அச்சகங்கள் மட்டுமே இயங்கி வந்துள்ளன. அவை தமிழ்த் தொண்டும் சமூகத் தொண்டும் ஆற்றியுள்ளன. 2. பெரும்பாலும் பக்திப் பாடல்கள் அடங்கிய நூல்கள் இவ் அச்சகங்கள் மூலம் வெளியாகியுள்ளன.

3. பல்வேறு வகையான பா வகைகளில் கவிதை நூல்கள் அச்சிடப் பெற்றுள்ளன. 4. அங்கதச்சுவை மலிந்த நூல்களும் தோன்றியுள்ளன.

5. தாம் ஈடுபாடு கொண்ட பெரியோர்கள் இறந்த ஞான்று அன்னாரது அடியார்கள் இரங்கற்பாக்கள் இயற்றியுள்ளனர்.

6.ஆங்கிலேயர் ஆட்சியைப் போற்றும் வகையில் அமைந்த பாடல்களும் பாடப்பெற்றுள்ளன.

7. தமிழ்க் கவிஞர் பலர் விருதையிலும், அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலும் வாழ்ந்துள்ளனர்.

தமிழ் வளர்ச்சி இயக்கக வெளியீடுகளான தமிழ் நூல் விவர அட்டவணை நூல்கள்' தரும் விவரங்களை மூலமாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது. 1. அச்சகங்களின் தமிழ்த் தொண்டும் சமூகத் தொண்டும்

விருதுப்பட்டியில் கி. பி. 1921இல் விளங்கிய முதல் அச்சகம் 'சச்சிதானந்தம் பிரஸ்' என்ற அச்சகமாகும். 1927இல் 'உண்மை விளக்கம் பிரஸ்2 என்ற மற்றொரு

1.

தமிழ்நூல் விவர அட்டவணை 1921 - 1925; 1925

2.

1930: 1931 - 1935

சச்சிதானந்தம் அச்சகம் ச. அ. என்றும், உண்மை விளக்கம் அச்சகம் உ. வி. அ. என்றும் இனிவரும் பகுதிகளில் கையாளப்பெறும்.

காகிதச்சுவடி ஆய்வுகள்

71