உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அச்சகமும் தோன்றியுள்ளது. பதினைந்து ஆண்டுக் காலகட்டத்தில் இவற்றில் முப்பத்தொன்பது நூல்கள் அச்சேறியதாகத் தெரியவருகிறது.

இவற்றுள் தமிழ் இலக்கியம் வளம் பெற உதவியவை பல. சிந்து. கீதம். கீர்த்தனை. பாட்டு, சந்தப்பா. பாசுரம், கலிவெண்பா, இரட்டைமணிமாலை எனப் பல்வேறு இலக்கிய வகைகளைச் (genres) சேர்ந்த நூல்களை இவ் அச்சகங்கள் வெளியிட்டுள்ளன.

இயற்கை விபத்துக்களையும், சமூகப் பிரச்சினைகளையும் சித்திரிக்கும் சில நூல்களும் வெளிவந்துள்ளன. மதுரையில் நிகழ்ந்த வெள்ளப்பெருக்கு (பி. கே. என். பொன்னுச்சாமி பிள்ளை, கண்ணையா வாத்தியார். மதுரை, 'விபரீதச்சிந்து', 1922, ச.அ). ஓர் உயிர்க்கொலைபற்றிய நிகழ்ச்சி (எம் புகழ்கருப்ப நாடார், விருதுநகர், படுகொலைச் சிந்து, 1930, ச. அ), உயிர்க்கொலை கூடாது என்பதை வற்புறுத்துதல் (எஸ். முருகப்ப செட்டி, காரைக்குடி, மனிதர் வயப்படும் அகில உலக உயிர்ப் பிராணிகள் மகாநாடு. 1922. ச. அ), புகைவண்டியின் வருகை (எஸ். அப்பாதுரை நாடார். விருதுநகர், சிங்காரப் புகைரதக் கும்மி. 1926. ச. அ) போன்ற சமூகம் தொடர்பான செய்திகளும் சில நூல்களில் பதிவாகியுள்ளன.

2. பக்தி நூல்கள்

இவ்விரு அச்சுக்கூடங்களில் பக்தி நூல்களே பெரும்பாலும் (50%) வெளியிடப்பெற்றுள்ளன.

திருக்கோயில்களுக்குப் பாத யாத்திரையாகச் செல்வோர் பாடக்கூடிய வழிநடைச் சிந்து நூல்கள் இயற்றப் பெற்றுள்ளன. கழுகுமலை சுப்பிரமணியக் கடவுள் (கருப்பண நாடார். வழிநடைச் சிந்து, 1922, ச. அ), சிவகாசி சுப்பிரமணியக் கடவுள் (ஏ.எம் வி பழனிச்சாமிக் கவிராயர், விருதுநகர், வழிநடைச் சிந்து, 1927, உ. வி. அ), விருதுநகர் மாரியம்மன் (ஏ. எம். வி. பழனிச்சாமிக் கவிராயர், விருதுநகர், வழிநடைச் சிந்து. 1928, ச. அ). இருக்கங்குடி மாரியம்மன் (சிவானந்தம் பிள்ளை, இருக்கங்குடி, வழிநடைச் சிந்து. 1930, உ.வி. அ). திருவில்லிபுத்தூர் ஆண்டாள் (வி. எஸ். சாமிதாஸ். தூத்துக்குடி, வழிநடைச் சிந்து, 1921, ச. அ.) என இத்தெய்வங்களின்மீது பக்திப் பாடல்களைக் கொண்ட வழிநடைச் சிந்து நூல்கள் காணப்பெறுகின்றன. திருப்பரங்குன்றத்து முருகனுக்குக் காவடி எடுத்துச் செல்லுகையில் பாடப்பெறும் காவடிச் சிந்து (கே. ஒய். முத்துச்செல்லமாச்சாரி. காவடிச் சிந்து, 1930, ச. அ.) நூலொன்றுபற்றித் தெரிய வருகிறது. இருக்கங்குடி மாரியம்மன் திருவிழாவின்போது முளைப்பாலிகை வளர்த்து மகளிர் ஒருங்குகூடிக் கும்மியடிக்கும் விதத்தில் பாடல்கள் இயற்றப் பெற்றுள்ளன (எம். புகழ்கருப்ப நாடார். விருதுநகர், மாரியம்மன் முளைப்பாரிக் கும்மி, 1929, ச. அ). சோலைச்சாமி என்ற சாமி பெயரில் கும்மியும் தெம்மாங்குச் சிந்துப் பாடல்களும் பாடப்பெற்றுள்ளன (மந்திரமூர்த்திக் கவிராயர், சோலைச்சாமி பேரில் கும்மி தெம்மாங்குச் சிந்து, 1930. ச. அ). வத்திராயிருப்புக்கு அருகிலுள்ள சதுரகிரி என்ற மகாலிங்கமலையில் எழுந்தருளியிருக்கும்

குறித்து வழிநடைச் சிந்தும் முளைப்பாரிக் கும்மிப் பாடல்களும்

எழுதப்பெற்றுள்ளன (எம். புகழ்கருப்ப நாடார். விருதுநகர், வழிநடைச் சிந்தும் முளைப்பாரிக் கும்மியும், 1929, ச அ)

72

காகிதச்சுவடி ஆய்வுகள்