உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பல்வேறு தெய்வங்களை விருதுநகர் மாரியம்மன் (பி. எஸ். வி. சங்கரலிங்கதாஸ். விருதுநகர். பக்திரசக் கீர்த்தனை. 1924. ச. அ.). விளாம்பட்டி பத்ரகாளியம்மன் (எம். சங்கரலிங்கதாஸ், விளாம்பட்டி, பக்திரசக் கீர்த்தனை. 1921. ச. அ.) ஏசு கிருஸ்து அருளானந்த கருப்பையா கவி. பாளையம்பட்டி. பக்திரசக் கீர்த்தனைகள். 1921. ச. க.). மற்றும் பிற தெய்வங்கள் (க. அ. புன்னைமுத்து நாடார். கல்லூரணி, பக்தியின்பப் பஜனாமிர்தம். 1921. ச. அ) ஆகியோரைப் போற்றும்வண்ணம் கீர்த்தனை நூல்கள் இயற்றப்பெற்றுள்ளன.

ஏரல் மாநகரைச் சார்ந்த அருணாசல சுவாமிகள் புகழ் பாடும் நூல் (குருசாமி நாடார். சிவகாசி நோட்டுச் சந்தப்பா, 1921, ச. அ.), சின்னமூப்பன்பட்டியில் கோயில் கொண்டுள்ள மாலையம்மன் என்ற நாச்சியாரம்மனைப் போற்றும் பாடல் நூல் யூ. மு. நா.இரத்தினசாமி நாடார். தோத்திரப் பாக்கள். 1933, உ வி, அ), நிறைகுளவல்லியம்மன் என்ற கிராம தேவதையைப் பரவும் நூல் (வி. ஏ. குமரய்ய நாடார். பெருநாழி. நிறைகுளவல்லியம்மன் கலிவெண்பா, 1926. ச. க.). விருதுநகர் முருகனை வழிபடவென அமைந்த நூல் (பி. எம். நாச்சியப்ப நாடார். திருவிரட்டை மணிமாலை. 1928. உ. வி. அ) ஆகியனபற்றித் தெரியவருகிறது.

விருதுநகர் மாரியம்மன் திருவிழா அலங்காரச் சிறப்பைப் போற்றும் வகையிலும் (எம். புகழ்கருப்ப நாடார். விருதுநகர். மாரியம்மன் திருவிழா அலங்காரச் சிறப்பு. 1930.உ வி. அ). குரங்கணியிலுள்ள முத்துமாலையம்மன் திருவிழா அலங்காரச் சிறப்பை விவரிக்கும் வகையிலும் (மு. புகழ்கருப்ப நாடார். விருதுநகர். திருநெல்வேலி ஜில்லா குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் திருவிழா அலங்காரச் சிறப்பு. 1933. உ.வி.அ.) நூல்கள் எழுந்துள்ளன. ஒளவை பாடிய சிவதோத்திர ஆத்திச்சூடி என்ற நூல் விருதையில் உண்மை விளக்கம் அச்சகத்தில் (திருவாலவாயன் -ப. ஆ.. 1927) அச்சிடப் பெற்றுள்ளது. அந்நியராட்சியின்போது அரசியலை விட்டு ஒதுங்கி வாழ்ந்த ஆன்மீகவாதிகள் தெய்வத்தின்பால் ஈடுபாடு கொண்டு பக்தி நூல்கள் பலவற்றை இயற்றியமை இதிலிருந்து தெரியவருகிறது.

3. பல்வேறு பா வகைகள்

சிந்து என்ற பாவகையில் இயற்றப்பெற்ற பதினைந்து நூல்கள் கிடைக்கின்றன. வழிநடைச் சிந்து. காவடிச் சிந்து, விபரீதச் சிந்து. நொண்டிச் சிந்து (எம். புகழ்கருப்ப நாடார். விருதுநகர், 1927, ச. அ.). படுகொலைச் சிந்து. தேகவியோக சிந்து (எஸ்.ஆர். புலுக்கருப்பண்ண நாடார். 1927. உ. வி. அ.) முதலியனவும், சிந்துப்பாவின் வகைகளுள் ஒன்றான குமமிப் பாடலாக 3 முளைப்பாரிக் குமமி என்பதுவும் தெம்மாங்குச் சிந்து என்பதுவும் இக்காலகட்டத்தில் இயற்றப் பெற்றுள்ளன. பல்லவியும் அனுபல்லவியும் இன்றி முச்சீரடியாய் அமைவது சிந்து. முதலடியில் தனிச்சொல் பெற்றும் வருதல் உண்டு.4

பல்லவி. அனுபல்லவியுடன் அமைவன கீதம். கீர்த்தனைகளாம். பரமபதபாசுர கீதம் என்ற கீதங்கள் அடங்கிய நூலும், பக்தியை உள்ளடக்கமாகக்

3. தெலுங்குச் செட்டியார் என்ற யாகக்ஷத்திரியர் 3ஆவது மகாநாட்டு வைபவம் கும்மிப் பாடல்களாகக் கோணைய்ய செட்டி என்பவரால் இயற்றப் பெற்றுள்ளன.

4

மு. கப்புலெட்சுமி இசை நாடகங்களில் சிந்துப்பாடல், தமிழியல் ஆய்வு. ஞா. த. ப. ஆ. மன்றம். 1996, பக். 352-356.

காகிதச்சுவடி ஆய்வுகள்

73