உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கொண்ட கீர்த்தனைகளும் இயற்றப் பெற்றுள்ளன.

பல்வேறு சந்தங்களில் (Notes) அமைந்த நோட்டுச் சந்தப்பாவும்,

கலிவெண்பாவும். இருவகைப் பாக்கள் மாறி மாறி அமையும் மாலையும்

தோன்றியுள்ளன.

வேடிக்கை நிறைந்த பாட்டு நூலும், குரங்கு சண்டையைப்பற்றிய பாட்டு நூலும், கத்தாழைப் பூச்சிபற்றிய பாட்டு நூலும் 5 (எம். புகழ்கருப்ப நாடார். 1930, உ, வி. அ.) எழுந்துள்ளன.

சமூகச் சித்திரிப்புக்கள்பற்றிய நூல்களாயினும் அவை பாக்களாகவே இயற்றப் பெற்றமைக்குப் பாண்டியன் வருகை' என்ற ஆங்கிலேயரைப் போற்றி அமையும் பாடல்களே சான்று. பிறர் உதவியை வேண்டி நின்றபோதும் பாடல்களாகவே பாடியுள்ளனர். அவ்வகையில் சீட்டுக்கவிகளைக் கொண்ட பிரபந்தம்' (பி. சிவத்த கருப்பையா நாடார், 1924. ச. அ.) என்ற பெயரில் நூலொன்றும் காணப்பெறுகிறது.

இவ்வாறாகப் பல்வேறு பா வகைகளில் நூல்கள் இயற்றப் பெற்றுள்ளன.

கோபாலகிருஷ்ண நாடார் ஜீவிய சரித்திரம் (எஸ். பி. எஸ். முத்துக்காமாட்சி நாடார். 1928. உ.வி. அ.) என்ற நூலும். தெய்வராய தேசிக சுவாமிகள் ஆதீன பரம்பரை பற்றிய நூலும் (வெ. அ. குமரய்ய நாடார். பழசை நகர், 1926. ச. அ). மனிதர் வயப்படும் அகில உலக உயிர்ப்பிராணிகள் மகாநாடு என்ற நூலும் கவிதை நூல்களா உரைநடை நூல்களா என்பது தெரியவில்லை.

4. அங்கதச் சுவை மலிந்த நூல்கள்

மூன்று வேடிக்கைகளைக் கொண்ட வேடிக்கைப் பாட்டு அருளானந்த கருப்பையா கவி. விருதுநகர், 1924. ச. அ). கலிகாலத்தில் நிகழும் அவலங்களைச் சுட்டும் கலிகாலப் பாட்டு (ஆர். ஷண்முகதாஸ். 1925. ச. அ.). கவிராஜ்குஞ்சரம் என்ற மருத்துவர் பெறும் மிகையான மருத்துவக் கட்டணம் பற்றிய நூல் (வி எம். எஸ். சுந்தரம். 1929. ச. அ.). திருச்சுழியில் நிகழ்ந்த குரங்குச் சண்டையை விவரிக்கும் பாட்டும் (கருப்பையா கவி. திருச்சுழி. குரங்குச் சண்டையின் பாட்டு, 1922, ச. அ) ஆகியவை அங்கதச் சுவை நிறைந்த நூல்கள் என்பது நூல்களின் தலைப்பிலிருந்து தெரிகிறது. 5. இரங்கற்பாக்கள்

தாம் ஈடுபாடு கொண்ட ஒருவரது மறைவைத் தாங்கவியலாத கையற்ற நிலையில் கையறுநிலைப் பாடல்கள் பாடுவது மரபு. 1926இல் தம் குரு மறைந்தபோது 'பரமபத பாசுரம்' பாடிய எம். சங்கரலிங்கதாசர் என்பவர், பழனி குமாரசாமி மறைந்தபோது 1929இல் 'பரமபத பாசுர கீதம்' என்ற நூலினை இயற்றியுள்ளார். அன்னார் குரு எனக் குறிப்பிடுபவரும் பழனி குமாரசாமி என்பவரும் ஒருவரா. அல்லது வெவ்வேறு பட்டவரா என்பது அறிய இயலவில்லை.

5 கத்தாழைப் பூச்சிப் பாட்டு' என்பது எதைப்பற்றிய நூல் என்பது தெரியவில்லை.

6. 'குரங்குச் சண்டைப் பாட்டு" என்ற நூல் குறியீட்டுப் பொருண்மை (Symbolic Meaning) உடையதாக இருக்கக்கூடும்.

74

காகிதச்சுவடி ஆய்வுகள்