உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புன்னை முத்துக் குருசாமி (கோட்டூர்) என்பவர் தம் பூதவுடலை விடுத்துப் புகழுடம்பு எய்தியபோது எஸ். ஆர். புலுக்கருப்பண்ண நாடார் என்பவர் 'தேகவியோக சிந்து' என அவர் புகழ் போற்றி இரங்கற்பாப் பாடியுள்ளார்.

தொல்காப்பியம் சுட்டும் கையறுநிலைப் பாடல் மரபின் தொடர்ச்சி இருபதாம் நூற்றாண்டிலும் காணப்பெறுவதற்கு இவை சான்றாவன.

6. ஆங்கில ஆட்சியைப் போற்றல்

மேலக்கோட்டையூரைச் சேர்ந்த எஸ். சங்கரலிங்கதாஸ் என்பவர் 1928இல் பாண்டியன் வருகை' என ஆங்கிலேயர் ஆட்சியைப் பாண்டியர் ஆட்சியோடு ஒப்பிட்டு நூல் எழுதியுள்ளார். அவரைப் பின்பற்றி விருதையைச் சேர்ந்த சங்கரலிங்கதாசன் என்பவரும் 1929இல் 'பாண்டியன் வருகை' என ஆங்கிலேயர் துதி பாடியுள்ளார்.

நீதிக்கட்சியின் கோட்டையாக விருதையும், அதன் சுற்றுப்புற ஊர்களும் விளங்கியதன் தாக்கத்தினால் வெள்ளையரின் ஆட்சிச் சிறப்பைப் போற்றிப் பாடும் நிலை இருந்திருத்தல் கூடும் என்பது தெரிகிறது.

7. கவிஞர் வளர்த்த தமிழ்

1927இல் தொடங்கி 1933 வரை ஏழாண்டுகளில் ஏழு பக்திப் பாடல் தொகுப்புக்களை எழுதி வெளியிட்டவர் விருதை. எம். புகழ்கருப்ப நாடார். இரங்கற் பாக்களும், பக்திக் கீர்த்தனைகளும், 'பாண்டியன் வருகையும் எழுதியவர் எம். சங்கரலிங்கதாஸ் ஆவார். அருளானந்த கருப்பையா கவி ஏசுவின் புகழ் பாடும் கீர்த்தனைகளும் அங்கதச்சுவை நிறைந்த நூல்களும் இயற்றியவர். மேலும் விருதை ஏ. எம். வி. பழனிச்சாமிக் கவிராயரும், பெருநாழி வெ.அ. குமரய்ய நாடாரும் இரண்டிரண்டு நூல்களை எழுதியுள்ளனர்.

விருதையிலும், அதனைச் சூழ்ந்துள்ள பகுதியிலும் கவிஞர்கள் பலர் வாழ்ந்துள்ளனர் என்பதற்கு மேற்கூறிய கவிஞர்களும் அவர்தம் நூல்களும் சான்றாகும்.

8. இறுவாய்

விருதையின்கண் முதலில் தோன்றிய அச்சகங்கள் இரண்டும் நூல்களை வெளியிடுவதன் வாயிலாகக்க் கல்வியறிவைப் பரப்பி, தமிழையும், பக்தியையும் வளர்த்ததோடு சமூகப் பிரச்சினைகளையும் அணுகியுள்ளன என்பது தெளிவாகிறது.

காகிதச்சுவடி ஆய்வுகள்

75