உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




H

இரா. வசந்தமாலை பாரதிதாசன் மகளிர் கல்லூரி புதுச்சேரி

அக்கா சுவாமிகள்

இசை நூல்

ஓர் அறிமுகம்

சீதமலர்ப் பாதமதைச் சிந்தித்தேன் அனுதினமும்

வாதனை செய்யாமலிப்போ வரமருள் அக்காசாமியே"

என்று வரகவி மாணிக்க ஆச்சாரியாரவர்களால் வணங்கப் பெற்றவர் ஸ்ரீகுரு அக்கா சுவாமிகள். கண்யன்' என்னும் இயற்பெயர் கொண்ட அக்கா சுவாமிகள் இலங்கையில் பிறந்து புதுச்சேரியில் அடைக்கலமானவர். சித்து வேலைகள் பல புரிந்து சிந்தனை உரையாற்றிய ஆத்ம ஞானிகளின் வரிசையில் முதலிடம் வகிப்பவர். இவர் தமது அருள் நிலையில் ஈடுபாடுற்று வரகவி மாணிக்கதாசனார் அவர்களால் பாடப் பெற்றதே 'ஸ்ரீ அக்கா சுவாமிகள் பஞ்சரத்தினமும், கீர்த்தனமும்' எனும் நூலாகும். இந்நூல் சிறந்த இசை நூலாகத் திகழ்ந்த போதும் எண்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகும் இந்நூலுக்கு மறு பதிப்பு வரவில்லை.

நூலின் முகப்பு

இறைவனை வேண்டித் தொடங்கும் மரபின்படிச் 'சிவ மயம்' தொடக்கமாய் அமைகிறது. பிறகு 'ஸ்ரீ வாரடைக்கை சுவாமிகளென்னும் அக்கா சுவாமிகள் பஞ்சரத்தினமும், கீர்த்தனமும்' என்பதாக நூலின் தலைப்பு இடம் பெறுகின்றது. நூலியற்றிய கவிஞரின் பெயர் நேரிடையாகக் குறிக்கப் பெறாமல் இன்னாரின் மகன் என்றும், சகோதரர் என்றும் கூறும் மரபினை அடியொற்றி

-

மகா - ள - ள ஸ்ரீ அப்பாசாமி ஆச்சாரியார் குமாரரும்

-

-

-

மகா ள ள ஸ்ரீ மோகாம்புரி ஆச்சாரியார் சகோதரருமாகிய வரகவி

மாணிக்க ஆச்சாரியாரவர்களால்

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூல் 1912ஆம் ஆண்டு 'புதுவை வித்தியாபி வர்த்தனி எனும் அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப் பெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணிக்கதாசனார் குறிப்பு

அக்கா சுவாமிகளின் தொண்டர்களுள் ஒருவராக மாணிக்கதாசனார் கருதப் படுகின்றார். இவர் சுவாமிகளின் மீது கொண்ட அன்பின் காரணமாக.

76

காகிதச்சுவடி ஆய்வுகள்