உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




"ஆதரித்தாளுகின்ற அக்கா பரிதேசி யுன்மேல்

காதல் கொண்டு பாடி வந்தேன்"

என்று துதிப் பாடலின்கண் குறிப்பிட்டுள்ளார். சுவாமிகளின் சித்து வேலைகள் பலவற்றை நேரில் கண்டதன் காரணமாகத் தமது கீர்த்தனைகளில் இத்திருவிளையாடல்கள் பலவற்றை விளக்கியுள்ளார். தியான நிலையில் இருக்கும் அக்கா சுவாமிகளை இந்நூலாசிரியர் வணங்கி நிற்பதாக ஓவியம் ஒன்று நூலின் முகப்பில் வரையப்பட்டுள்ளது. இவை தவிர நூலாசிரியர்பற்றிய குறிப்புகள் இடம் பெறவில்லை. நூலின் தலைப்பு 'அக்கா சுவாமிகள் பஞ்சரத்தினமும் கீர்த்தனமும்' என்றுள்ளதால் இந்நூல் அக்கா சுவாமிகளைப் பற்றிய கீர்த்தனைகளா? அல்லது அக்கா சுவாமிகள் இயற்றிய கீர்த்தனைகளா? எனும்படியான மயக்கத்திற்குரிய நிலையில் அமைந்துள்ளது.

பஞ்சரத்தினம்

நூலின் தொடக்க மரபின்படி 'விநாயகர் துதி' 'நேரிசை வெண்பா'வில் அமைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அக்கா சுவாமிகள்மீது பாடுவதற்கு அருள் புரிய வேண்டும் என்று சுவாமிகளையே வேண்டிக் கொள்வதாக ஒரு பாடலும் அமைகின்றது. இதன் பின்னரே ஆசிரிய விருத்தத்தில் பஞ்சரத்தினப் பாடல்கள் இடம் பெறுகின்றன. இப்பாடல்களில்

1 நிதி பெருகும் புதுவையில் தான் சுவாமிகளை நாடிய திறம்.

2 சுவாமிகளை அடியார்கள் உபசரித்த பாங்கு.

3) புதுவை நாராயணசாமி மடத்தில் தங்கியமை.

4) மனத்தை ஒருநிலைப்படுத்த வேண்டும். 5) யாழ்ப்பாணத்தில் தோன்றி வளர்ந்த நிலை போன்ற செய்திகள் காணப்படுகின்றன. கீர்த்தனங்கள்

பஞ்சரத்தினத்தைத் தொடர்ந்து கீர்த்தனைகள் இடம்பெறுகின்றன. இந்நூலின்கண் ஒன்பது கீர்த்தனைகள் உள்ளன. இவையன்றி, 'இலாவணி' 'ஞானக் கும்மி அடைக்கலப்பா' 'தேவாரம்' அமைப்புகளில் ஒவ்வொரு பாடலும், இறுதியில் 'மங்களம்' கூறுவதாக ஒரு பாடலும் இடம் பெற்றுள்ளன. கடவுள் வாழ்த்து முதலாக. 'மங்களம் ஈறாக 20 பாடல்கள் இந்நூலில் உள்ளன.

மாணிக்கதாசனார் கீர்த்தனை அமைப்புகளில் இராக தாளமிட்டு ஒன்பது பாடல்களைப் பாடியுள்ளார். அவை, நவரோஸ். எதுகுல காம்போதி. தோடி (2), சங்கரா பரணம். அடாணா. தன்னியாசி, காம்போதி, முகாரி என்பனவாகும். தாளத்தை நோக்கும்போது ஆதி 16 பாடல்கள்), ரூபகம் (2), ஏகம் (1) என்ற நிலையில் இக் கீர்த்தனைகள் அமைந்துள்ளன.

கீர்த்தனைகளுக்குரிய அமைப்பாகக் கருதப்பெறுவது பல்லவி. அநுபல்லவி, சரணம் என்பதாகும். 'அருள் நிலையை' என்று தொடங்கும் பாடலில் காகிதச்சுவடி ஆய்வுகள்

77