உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இவ்வகை அமைப்புகள் இடம் பெறவில்லை, ஆனால் மெட்டுக்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. முகாரியில் அமையும் 'அருளாநந்தத்தை' எனத் தொடங்கும் கீர்த்தனையில் பல்லவி, அநுபல்லவி மட்டும் இடம் பெற்றுள்ளதேயன்றி 'சரணம்' எனும் அமைப்பு இடம் பெறவில்லை.

கீர்த்தனங்களின் மெட்டுக்கள்

கீர்த்தனங்கள் ஒவ்வொன்றும் இன்ன மெட்டில் பாடுதல் வேண்டும் என்பதற்காகத் தாசனார் மெட்டுக்களை அமைத்துள்ளார். பாடலைக் குறிப்பிட்ட இராகத்திற்குள் பாட இயலாதவர்கள் முன்னோர்கள் பயன்படுத்திய மெட்டுக்களைப் புதிய கீர்த்தனைகளில் பயன்படுத்திப் பாடுவது என்பது எளிது என்பதே இதற்கான காரணம். எனவே.

e @ 2

B)

மெட்டுக்கள்

'ஞான க்ருபாகரனே' 'சிற்சபையும் பொற்சபை 'வந்தருள் செய்'

(4)

'கனிகள் பறிக்கிறேன்'

(5)

ஐயனே வீரையனே'

(6)

'என்ன ஆநந்தம்'

'அப்பா எனையிப் போது'

(8)

'வானவர் நாதா'

(9) ப்ரம்மா நந்தத்தை'

கீர்த்தனைகள்

உந்தனருள் தாருமே .... அருள் நிலையை.... சித்தம் வைத்தெனை..... அருள் செய் ...

சாமியே அக்கா ....

அருள் நீ

அக்கா சாமியே .... அஞ்சலித்தேனே.

அருளா நந்தத்தை.

போன்ற மெட்டுக்களில் பாடல்களை அமைத்துள்ளார் கவிஞர்கள் முன்னோர்களின் மெட்டுக்களில் ஈர்க்கப்படுதல் இயற்கையாகும். அதனடிப்படையில் இயற்றப் படுவதே மெட்டமைப்புக் கீர்த்தனங்கள் தாயுமானவரின் ஆனந்தக் களிப்பிலும். அண்ணாமலையாரின் காவடிச் சிந்திலும், கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தன் சரித்திரக் கீர்த்தனையிலும் ஈர்க்கப்பட்டவர் மகாகவி என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

கீர்த்தனைகளில் முத்தாய்ப்பு வரிகள்

கீர்த்தனைகளின் ஈற்றடிகளில் அதனை இயற்றிய புலவர்களின் பெயர் இடம் பெறுதல் வழக்கமாகும் தாம் இயற்றிய பாடல்களில் தங்கள் பெயர்கள் இடம் பெறச் செய்து இன்னாரின் பாடல் என்பதை முத்திரையிட்டுக் காட்டுவதற்காக இம்மரபு மேற்கொள்ளப்பட்டது. 'கோபாலகிருஷ்ணன் பாடும் தில்லை' என்று முடிவுறும் போது கோபாலகிருஷ்ண பாரதியாருக்குரிய கீர்த்தனை என்றும். 'தனையறிந்தார்க் கினியன்' எனும்போது அறிந்தார்க் கினியனார் கீர்த்தனை என்றும். அறிந்து கொள்வது போல இவரும் தமது கீர்த்தனைகளின் முடிவில் 'மாணிக்கதாசன் பாடி வந்தேன்' என்றும். பக்தன் மாணிக்கந் தினம் பாடிப் பணிந்தேனிப்போ' என்றும் பாடி முடிக்கும் மரபினைப் பின்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

78

காகிதச்சுவடி ஆய்வுகள்