உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தர்க்க ஞானக்கும்மி

பஞ்சரத்தினம், கீர்த்தனங்கள் என்பதைத் தொடர்ந்து அமையும் இசைப் பாடல் வகை 'ஞானக்கும்மி ஆகும். நூலின் கண் 'அக்கா சுவாமிக்கும் - யாழ்ப்பாணம் யோக சுவாமிக்கும் நடந்த தர்க்க ஞானக் கும்மி' என்றே தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் கண் இடம்பெறும் செய்திகளை

1. வாழ்க்கை வரலாற்றை விளக்கும் பகுதி

2. சுவாமிகளின் திருவடியைச் சரணடைய ஆனந்தமாய்க் கும்மி கொட்டும் பகுதி

என்றவாறு பகுத்தறியலாம்.

வாழ்க்கை வரலாற்றை விளக்கும் பகுதி

மாணிக்கதாசனார் கும்மி கொட்டிப் பாடுவதற்கு முன்பு சுவாமிகளின் அற்புதச் செயல்கள் பலவற்றையும் பாடியுள்ளார். இப்பகுதியின் வாயிலாக அக்கா சுவாமிகள் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் என்பதும். 'கண்யன்' என்னும் இயற்பெயர் கொண்டவர் என்பதும் தெரிய வருகின்றது.

'ஆதியில் யாழ்ப்பாணம் ஜனனமாய்'

'கண்யனெனும் பேர் வாய்ந்த அக்காசாமி

என்பன இதற்குத் தக்க ஆதாரங்கள். ஒருசமயம் சுவாமிகள் யாழ்ப்பாணம் சென்ற போது.

"ஒருவர் ஏளனமாகச் 'சுவாமிகள் அன்ன அபிஷேகம் செய்து கொள்ளுமா?' என்று கேட்க, சுவாமிகளும் தலையசைக்க பல அண்டாக்களில் சாதத்தை வடித்துச் சுடச் சுடச் சுவாமிகளின்மீது கொட்டினார்கள். பின்பு சூடு ஆறியதும் சாதத்தை நீக்கிப் பார்க்க சுவாமிகள் இறைவனுடன் தொடர்பு கொண்டிருந்தார். அபிடேகம் செய்தவனின் கண் பார்வை போய் விட்டது"

என்பது ஒரு வரலாறு. இந்நிகழ்ச்சியை.

"செய்யுமென்று உட்கார்ந்த அக்கா சுவாமி சிரசின் மீதிலே

வையம் புகழவே யன்னமதைக் கொண்டு வட்டித் தாரப்போதே"

என்று பாடியுள்ளார். கண் பார்வை இழந்த பின்பு சுவாமிகளிடம் சரணடைந்தமையை.

"சுவாமி நின் முகம் பார்க்கக் கண்ணில் லாமல் சரணமடைந்தேன்"

என்றும் குறிப்பிட்டுள்ளார். பார்வை இழந்தவனோடு புதுவைக்கு வந்து 'அக்கா சுவாமி' என்ற பெயருடன் பல அருட் செயல்களைப் புரிந்துள்ளார். மீண்டும் பார்வை பெறும்படி அற்புதம் நிகழ்த்தியுள்ளார். சுவாமிகளுக்கு உணவளிக்கப் பல நூற்றுக் கணக்கான அன்பர்கள் காத்துக் கிடக்க அவர்களிடம் உண்பதற்கு ஒரு ரூபாய் கொடுக்க வேண்டுமென்ற நிபந்தனையின் பேரில் சாப்பிட்டதாகக் கூறுவர். அந்த ஒரு ரூபாயைச் 'சபாபதி' என்பவரிடம் கொடுத்துச் சேர்த்து வந்தமையை,

காகிதச்சுவடி ஆய்வுகள்

79