உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அக்கா சுவாமி வெகுநாள் இவ்வூர்தனில் ஆநந்த மாநந்தமாய் தக்கபடி யன்னம் பொசிக்கு மிடத்தில் தக்ஷணை யொருரூபாய் தக்ஷணையொரு ரூபாவை யக்ஷணமே தானிருக்குமிடத்தில்

குக்ஷிபாதை தீர்க்கும் சபாபதியிடம் கொடுத்து வைத்தார் ரூபாயை"

என்று மாணிக்கதாசனார் பாடியுள்ளார். சுவாமிகள் யாழ்ப்பாணத்தினின்று புதுவைக்கு வருகை தருவதை அறிந்து அவர் பொருட்டுக் காத்திருந்தவர் நாராயண குரு சுவாமிகளாவார். இவர் அக்கா சுவாமியின் பெயரில் கட்டிய மடம் ஒன்றில் ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானமிடப்பட்ட செய்தியும் செவி வழிச் செய்தியாகும். இம்மடம் நாராயண சுவாமிகளால் கட்டப் பெற்றதால் முதலில் நாராயண சுவாமி மடம்' என்றே அழைக்கப் பட்டது. இச்செய்தியை,

உமையாள் பூசை செய்யும் நாராயண சுவாமி மடமதில்"

என்பதிலிருந்து அறிந்து கொள்ளவியலும். அக்கா சுவாமிகள் புதுவைக்கு வந்த பிறகு இவருடனிருந்து தொண்டாற்றிய சீடர்களில் குறிப்பிடத்தக்கவர் நாராயண சுவாமியாவார். இவர் சுவாமிகளின் ஜீவ சமாதிக்கு வழிபாடு நிகழ்த்துவதன் பொருட்டுக் காவடி எடுத்துத் திருவாசகம் ஓதி இதனால் பெற்ற செல்வத்தின் வாயிலாக அக்கா சுவாமிகளுக்கு ஆராதனையும். அன்ன தானமும் செய்யப்பட்டமைக்கு

அக்கா சாமிக் காராதனைகள் செய்து"

வட்ட மாயனைக் காவடி யெடுத்து"

எனும் வரிகள் சான்று பகர்வனவாம்.

சுவாமிகள் குறித்த செவிவழிச் செய்திகள்

'அக்கா சுவாமிகள்' பெண்களைச் சகோதரிகளாகக் கருதியமையால் அவர்களை 'அக்காஅக்கா' என்றழைக்க அதுவே அவர் பெயராயிற்று என்பர். ஒரு முறை ஏற்பட்ட தர்க்க வாதத்தின் போது சுவாமிகள் தன்னுடைய கண்ணில் மிளகாயை வைத்துக் கட்டிக் கொள்ள, எதிர்வாதம் புரிந்தவருக்குக் கண்கள் எரிந்ததாகக் கூறுவர்.

உணவு உண்ணும்போது அதை வெறும் கல்லின் மீதே வைத்து உண்ணும் வழக்கம் சுவாமிகளிடம் இருந்திருக்கின்றது. இக்கல் இன்றும் புதுவை முத்தைய முதலியார் வீதியில் இருப்பதாகவும். அக்கல்லை மகப்பேற்றிற்கு முன்பாகப் பெண்கள் வணங்கி வழிபட்டுச் செல்வதாகவும், இதனால் நல்ல முறையில் மகப்பேறு நிகழ்வதாகவும் நம்பி வருகின்றனர். புதுவையில் புகழ் வாய்ந்த சாலை விநாயகரையும் முத்தியாலுப் பேட்டையில் உள்ள சுப்பிர மணிய கோயில் விநாயகரையும் அமைத்து வழிபட்டவர் என்றும் சுவாமிகளைக் குறிப்பிடுவர். இவர் ஜீவ சமாதி அடைந்த ஆண்டு 1872 என்பர்.

சுவாமிகளின் மீது பற்றுக் கொண்ட சீடரான நாராயண சுவாமிகள் தமது காலில் கல்லைக் கட்டிக் கொண்டு இழுக்க அதனால் அவருக்குக் கிடைத்த வருவாயின் மூலம் சுவாமிகளுக்காக (வழிபாட்டிற்காக) நிலங்களை வாங்கியுள்ளார். இவரைச் சுற்றிப் பல தொண்டர்கள் இருந்து பணியாற்றியுள்ளனர். இவரது மறைவு 1904 என்பர்.

80

அக்கா சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் லிங்க பிரதிஷ்டை காகிதச்சுவடி ஆய்வுகள்