உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




-

-

ஏற்படுத்தப்பட்டதனால் இன்றும் பல்வேறு பூசைகள் சிறப்பாக மேற்கொள்ளப் படுகின்றன. 1996 - ஏப்ரல் முதல் பௌர்ணமி பூசையும். 1996 - டிசம்பர் முதல் பிரதோஷ பூசையும், 1997 - ஜூன் முதல் விநாயக வழிபாடும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இக்கோயில் அமைந்துள்ள வீதி ‘அக்கா சுவாமி மடத்து வீதி' என்றே அழைக்கப் படுகின்றது. சுவாமிகள் தனது ஆற்றலின் மூலம் கூடு விட்டு ஆவி பிரிந்து மீண்டும் கூட்டினுள் அடைதல், உடல் உறுப்புகளைத் தனித் தனியே பிரித்து மீண்டும் கூட்டுதல் போன்ற அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். இதற்கான ஆதாரங்கள் பாடலுள் இடம் பெறவில்லை.

தர்க்க ஞானக்கும்மியில் இரண்டாவதாக அமைவது கும்மி கொட்டும் இசைப் பாடலாகும். இது சுவாமிகளின் திருவடியைச் சரணடைய வேண்டிப் பாடப்பட்டதாகும் அடைக்கலப்பா

அக்கா சுவாமிகளின் பெருமைகளை உரைத்து அவர் தம் திருவடிகளை அடைக்கல மடைவோம் எனும் நோக்கத்துடன் பாடப்பெற்ற ஒரு பாடலாகும். மாணிக்க தாசனார் சுவாமியை ஆதி சிவனின் கருணையால் உதித்தவன் என்கிறார்.

தேவாரம்

'வாரம்' என்பது இசை இயக்கம் நான்கினுள் ஒன்றாகும். எனவே, இவ்வகை இசை முறையில் பாட வேண்டும் என்ற விழைவின் காரணமாக இவரால் பாடப்பெற்ற பாடல் எனலாம். முடுகியல் நடையில் அமையும் பாடல் வாரப் பாடல் என்பதால் இப்பாடலை நூலின் ஈற்றுக்கு முன்பாக அமைத்துள்ளார்.

மங்களம்

L

“சித்தி நிலையை அறிந்துள்ளத்தில் வைத்த

சிற்பரா நந்தக் காசாமியே யான்

நத்தி வந்துன்னடி நித்தம் பணிந்து நின்

பத்தன் மாணிக்கதாசன் பாடின - மங்களம் மங்களம்"

என்பதாக நிறைவுப் பாடல் அமைகின்றது. கடவுள் வாழ்த்தில் தொடங்கி 'மங்களத்தில்' நிறைவுப்படுத்துவது மரபு என்னும் முறைப்படி இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. இசை வழி நோக்கும் போது அமைதியான விருத்தத்தில் தொடங்கப்பெற்று வாரம், மங்களம் என விரைவு நடைப் பாடலாக நிறைவு பெறுவது இந்நூலின் சிறப்பாகும்.

தொகுப்புரை

(D

மாணிக்கதாசனாரால் இயற்றப்பட்ட இந்நூல் அக்கா சுவாமிகளின் பெருமைகளையும் இவர்தம் அருட் செயல்களையும் விளக்குவதாக அமைகின்றது.

0 அக்கா சுவாமிகளின் பெருமைகளைப் போற்றும் நிலையில் பஞ்சரத்தினக் கீர்த்தனைகளும், கீர்த்தனை என்னும் இசை வடிவத்திற்கு வழி காட்ட வேண்டும். வாழ்க்கை வரலாற்றை விளக்கும் விழைவோடு ஞானக் கும்மியும் தாசனாரால் இயற்றப்பட்டுள்ளமை சிறப்பிற்குரியது.

காகிதச்சுவடி ஆய்வுகள்

81