உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலத்தில் ஆவணங்களில் இவ்வளவைப் பெயர்கள் வழக்கிழந்தன. கி. பி. 1860இல் கிடைத்தவை கொண்டு காணும் பொழுது அக்காலத்திலேயே செண்ட், ஏக்கர் போன்ற அளவுப் பெயர்கள் வழக்கில் உள்ளன.

"மிராசு 65 வயதுள்ள ரெங்கசாமிக்கு செண்ட் 50 போக பாக்கி ஏக்கர் 2 இதனை சேர்த்து 50 செண்டு 2 ஏக்கர் நிலத்தினை நாளது. தேதியில் தங்களிடம் கிரயம் ரூ. 600 வீதம் பெற்றுக் கொண்டு 10

என்ற வாசகங்கள் அதனைக் காட்டும்.

நிலங்களை அளக்கும் பொழுதே நான்கு எல்லைகளும் தெளிவாகச் சுட்டப்பட்டுள்ளன.

"சத்திரங் கருப்பூர் கிராமத்தில் வெங்கோபராயர் நஞ்சைக்கு கிழக்கு இராஜ கோபால சுவாமி கோவில் நஞ்சைக்கு மேற்கு காவேரி ஐயன் கரைக்கு வடக்கு புருஷோத்தம செட்டியார் நஞ்சை புஞ்சைக்குத் தெற்கு. இந்த நான்கு எல்லைக்கு உட்பட்ட

11

என்றும் ஒரு செண்ட் ரூ. 32 மதிப்புள்ள நிலத்தை என்றும் கூறியுள்ளதால் அக்காலத்து நில மதிப்பும் நமக்குத் தெளிவாகும். நில அளவுக்கு ஏற்ப வரி விதிக்கப்பட்டது. அதனை நில உரிமையாளர்களே செலுத்திக் கொள்ள வேண்டியது. ஏதாவது அந்நிலத்தின்மீது கடன்கள் இருந்தால் சொத்தின் பூர்வ பாத்தியக்காரர் முன்னின்று தீர்த்துக் கொள்ள வேண்டியது என்று தெளிவாகச் சுட்டப்பட்டுள்ளதால் நிலத்தைப் பாகுபாடு செய்தல், வரி கட்டுதல், உரிமம் கொள்ளல் போன்றவற்றில் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் அக்கால மக்கள் நுணுகிக் கண்டு தெளிவு பெற்று வாழ்ந்தமை புலனாகிறது. நில அளவைப் பெயர்களேயன்றி நிலங்களில் இருந்து வருகின்ற நெல்லை அளக்கும் கருவிகள் பெயர்களும் தெரிய வருகின்றன. பொதி, கலம், மரக் கால், நாழி, குறுணி. உழக்கு போன்ற முகத்தலளவைகள் கொண்டு அளந்து வந்துள்ளனர். இவைகளுள் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்பட்டவை மரக்கால். நாழி, கலம் என்பவை இறைவன் அல்லது அரசன் பெயர்களை அவ்வளவைக் கருவிகளுக்கு இட்டுள்ளனர். இராஜராஜ சோழன் காலத்து மரக்கால் ஆடவல்லான் என்ற பெயரால் அழைக்கப்பெற்றமையை அறியலாம். திருமூலன் நாழி என்று இறைவன் பெயராலும் அழைத்தமை புலனாகும். அக்கருவிகள் அளவு சரி பார்க்கப்பட்டு அரசாங்க முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. அம்முத்திரை இடப்பட்ட மரக்கால் போன்றவைதான் அளப்பதற்கு மக்களிடையே புழக்கத்தில் விடப்பட்டுள்ளது.

முடிவுரை

நிலங்களுக்கும், மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் நிலங்கள் பாகுபாடு செய்யப்பட்டு அளந்து வரையறை கொடுத்து அக்காலத்திலிருந்து மக்கள் செம்மையாகக் கொண்டு வந்துள்ளனர். ஒரு முறையான ஒழங்கமைந்த சமுதாயமாகத் திகழ்ந்துள்ளது.

10. மேற்கூறிய மடத்து ஆவணம். 1960ஆம் வருடம், கட்டு 3.

11 மேற்கூறிய, 1915ஆம் வருடம், 53ஆவது கட்டு.

காகிதச்சுவடி ஆய்வுகள்

87