உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




"குறுவை நெல் புரட்டாசி மாசத்தில் 6 கலமும் சிறுமணியன் நெல் வருகிற மாசி 15க்குள் 4 கலமும் கூடுதல் நெல் 10 கலத்தையும் அந்தந்த காலக் கெடுவில் தங்களுக்குச் சர்க்கார் முத்திரை மரக்காலால் அளந்து விடுவேன்”8

"பணத்தை குறிப்பிட்ட தேதியில் தரவில்லை என்றால் 100க்கு 2 ரூபாய் தம்படி சேர்த்து நான்கு மாதத்தில் செலுத்தி விடுவேன்"

என்று வட்டியிட்டுக் கொடுத்ததும் தெரிய வருகிறது. கரார் நாமா என்பது முத்திரைத் தாளில் எழுதப்படவில்லை. ஆவணம் எழுதும் முறை மாறாது எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளது. நிலம் பற்றிய தகவல் இதனுள் இல்லை. ஆனால் தாம் செய்யக் கூடிய அலுவல்கள், விதி முறைகள் அவைகளில் குறைவராமல் நடந்து கொள்ளும் உத்தரவாதம் ஆகியவை உள்ளன கி. பி. 1872இல் எழுதப்பட்டவை திருப்பனந்தாள் 4ஆவது இராமலிங்கத் தம்பிரான சன்னிதானத்துக்கு நேபாளம் இலாகா மண்டீசுவரம் மடம் கார்வார் அருணாஜலத் தம்பிரான் எழுதிக் கொடுத்ததாக உள்ளது.

ஆறுமுகம் பிள்ளை என்பவர் தனக்கு

உடன்படிக்கைப் பத்திரத்தைத் தஸ்தாவேஜ் என்று அழைக்கும் வழக்கம் உண்டு. கும்பகோணம் மகாதானபேட்டை மனைவியும் சந்ததியும் இல்லாததால் சொத்து முழுவதையும் தனக்குப் பிறகு ஸ்ரீ காசிமடம் எடுத்துக் கொண்டு தர்மம் செய்ய வேண்டும் என்பதைக் காட்டுவது தஸ்தாவேஜ் என்று அழைக்கப்பட்டுள்ளது.

அளவைகளும் ஆவணங்களும்

அக்காலச் சமுதாயத்தில் நிலங்கள் மக்களின் முதன்மைச் சொத்துக்களாக மதிக்கப்பட்டன. எனவே நில உரிமையாளர்கள் தங்களது நிலத்தினைத் துல்லியமாக அளந்து முறைப்படுத்திக் கொண்டனர். அரசின் வருவாய் பெரும்பான்மையும் நில வரியால் வருவதால் அரசும் அதற்குத் துணை நின்றது. நில அளவை முறைக்கு விதி வகுத்துக் கண் காணித்தது.

வருவதால் அரசும் அதற்குத் துணை நின்றது. நில அளவை முறைக்கு விதி

தொடக்க காலத்தில் மா, குழி, குறுக்கம், செய், தடி, வேலி போன்ற நில அளவுகள் குறிக்கப்பெற்றன. மேலும் நிலங்களை முந்திரி, காணி. மா, நிலம், பட்டி என்றும் பாகுபாடு செய்திருந்தனர். 6/2 குழி அல்லது 1 முந்திரி என்பது /4 காணியைக் குறித்தது. 2 முந்திரி கொண்டது 1/2 காணியாகும். 4 முந்திரி என்பது 1 காணி. 8 முந்திரி கொண்டது 1/2 மா என்று சொல்லப்பட்டது. 12 முந்திரி நிலம் என்றால் 3 காணி நிலம் என்று பொருள்படும். இஃது 1 3/4 மாணி என்றும் அழைக்கப்பட்டது. 100 குழி என்பது 1 மாகாணி எனப்பட்டது. 80 முந்திரி அல்லது 5 மா என்பது 1/4 நிலம் என்று கூறப்பட்டது. 1/ நிலம் என்றால் 100 குழி அல்லது 10 மா ஆகும். 1 நிலம் கொண்டவன் என்றால் 20 மா பெற்றவன் ஆவான்.

இவ்வளவைப் பெயர்களில் சிறிய அளவிற்கு ஏற்றவண்ணம் கோல் அல்லது தடி தயார் செய்து அதனால் அளந்து கணக்கிட்டனர். ஒரு குழிக்கு ஒரு கோல் அளவு எட்டுக் குழி யென்றால் எண் கோல் என்று அளந்தனர்.

8 மேற்கூறிய மடம. 1931ஆம் வருடம், 31ஆவது கட்டு.

9

மேற்கூறிய மடத்து ஆவணம். 1913ஆம் வருடம் 5ஆவது கட்டு.

86

காகிதச்சுவடி ஆய்வுகள்